Mamitha Baiju : ஜன நாயகன் ஷூட்டிங் முடிவில் விஜய் சார் எமோஷனல் ஆகிட்டாரு – மமிதா பைஜூ பேச்சு!
Mamita Baiju Talks About Thalapathy Vijay :மலையாள சினிமாவில் துணை நடிகையாக நுழைந்து, தமிழ், தெலுங்கு என அடுத்தடுத்த படங்களில் நாடியாக நடித்து வருபவர் மமிதா பைஜூ. இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் ஜன நாயகன் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் விஜய் சார் எமோஷனல் ஆனது மற்றும் அடுத்த படத்தில் நடிப்பாரா என்பதைப் பற்றி ஓபனாக பேசியிருந்தார்.

தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார் மமிதா பைஜூ (Mamitha Baiju) . இவர் ஜிவி பிரகாஷ் குமாரின் (G.V. Prakash Kumar) ரெபல் (Rebel) என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படமானது கலவையான வரவேற்பையே கொடுத்தது. இதை தொடர்ந்து நடிகர் விஜய்யின் (Vijay) ஜன நாயகன் (Jana Nayagan) படத்தில் முக்கிய ரோலில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படமானது பான் இந்திய திரைப்படமாகத் தயாராகிவருகிறது. இந்த ஜன நாயகன் திரைப்படமானது விஜய்யின் கடைசி திரைப்படம் என்ற நிலையில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகை மமிதா பைஜூ, நடிகர் சூர்யாவின் 46வது (Suriya46) திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக இணைந்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங்கும் சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை மமிதா பைஜூ, ஜன நாயகன் பட ஷூட்டிங் முடிவு மற்றும் விஜய்யிடம், தான் கேட்ட கேள்விகளைப் பற்றியும் பேசியுள்ளார். அதில் அவர் விஜய் சார் ஜன நாயகன் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் எமோஷனல் ஆகிவிட்டார் என்று பேசியுள்ளார்.




விஜய் பற்றி மமிதா பைஜூ பேச்சு :
சமீபத்தில் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மமிதா பைஜூவிடம் ஜன நாயகன் படம் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்க்கு பதில் அளித்த நடிகை மமிதா பைஜூ, “நான் ஜன நாயகன் பட ஷூட்டிங்கில் விஜய் சாரிடம், சார் இதுதான் உங்களின் கடைசி திரைப்படமா என்று கேட்டேன், அதற்கு விஜய் சார் என்னிடம், “எனக்குத் தெரியவில்லை, தேர்தலுக்குப் பின் பார்க்கலாம்” என சொன்னதாக மமிதா பைஜூ பேசியிருந்தார். அதை தொடர்ந்து நடிகை மமிதா பைஜூ , ” ஜன நாயகன் படத்தின் கடைசி நாள் ஷூட்டிங்கில் நான் பயங்கர எமோஷனலாக இருந்தேன், மேலும் கூட இருந்த அனைவரும் பயங்கர எமோஷனலாக இருந்தார்கள். விஜய் சாரின் கடைசி படம் என்பதால் அவரும் பயங்கர எமோஷனலாக இருந்தார்” என நடிகை மமிதா பைஜூ பேசியிருந்தார்.
நடிகை மமிதா பைஜூ பேசிய வீடியோ :
#MamithaBaiju Recent
– #JanaNayagan may not be #ThalapathyVijay‘s last film, as he says it depends on the election results.pic.twitter.com/jyfDZ9669K
— Movie Tamil (@MovieTamil4) June 22, 2025
வரிசை கட்டும் மமிதா பைஜூவின் படங்கள் :
நடிகை மமிதா பைஜூ மலையாள சினிமாவில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்து வருகிறார். இவர் விஜய்யின் ஜன நாயகன் படத்தைத் தொடர்ந்து தமிழில் பிரதீப் ரங்கநாதனுடன் டியூட் என்ற படத்திலும் முன்னணி நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இரண்டாம் கட்டத்திலிருந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து சூர்யாவின் 46வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். தமிழ், மற்றும் தெலுங்கு மொழியை அடையாளமாகக் கொண்டு உருவாகிவரும் இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். மமிதா பைஜூ மலையாள சினிமாவை தொடர்ந்து பான் இந்த மொழிகளிலும் படங்களை நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.