மமிதா பைஜு பிறந்த நாளை முன்னிட்டு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்திய டியூட் படக்குழு!
Actress Mamitha Baiju: மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வருபவர் நடிகை மமிதா பைஜு. இந்த நிலையில் மமிதா பைஜுவின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக டியூட் படக்குழு ஒரு சிறப்பு போஸ்ட ஒன்றை வெளியிட்டுள்ளது.

தமிழில் வரிசைக்கட்டி படங்களில் நடித்து வரும் நடிகை மமிதா பைஜு (Actress Mamitha Baiju) இன்று தனது 24-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இவர் நடிகர் பிரதீப் ரங்கநாதனுக்கு (Actor Pradeep Ranganathan) ஜோடியாக டியூட் படத்தில் நடித்து வரும் நிலையில் அந்தப் படக்குழு மமிதா பைஜுவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்தப் போஸ்டரில் ஒரு அறிவிப்பையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகின்றது. அதன்படி டியூட் படக்குழு வெளியிட்ட போஸ்டரில் டியூட் படக்குழு மனதாரா மமிதா பைஜுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ளது. இந்தப் படத்தில் நடிகை மமிதா பைஜுவின் கதாப்பாத்திரத்தின் பெயர் குரல் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் படம் வருகின்ற தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்றும் தெரிவித்துள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மமிதா பைஜுவிற்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய டியூட் படக்குழு:
Team #DUDE wishes its ‘Kural’ aka ‘The Heartthrob’ of every Dude out there, @_mamithabaiju a very Happy Birthday ❤🔥
All set for a MASSIVE DIWALI 2025 RELEASE 💥
⭐ing ‘The Sensational’ @pradeeponelife
🎬 Written and directed by @Keerthiswaran_
A @SaiAbhyankkar musical… pic.twitter.com/6aLQvFhie1— Mythri Movie Makers (@MythriOfficial) June 22, 2025




தமிழில் நடிகை மமிதா பைஜு நடிப்பில் வரிசைக் கட்டும் படங்கள்:
தமிழ் சினிமாவில் நடிகை மமிதா பைஜு தொடர்ந்து 4 படங்களில் நடித்து வருகிறார். அதன்படி நடிகர் விஜய் நாயகனாக நடித்து வரும் ஜன நாயகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் இரண்டு வானம் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
மேலும் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் டியூட் படத்தில் நாயகியாக நடிகை மமிதா பைஜு நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் சூர்யாவின் 46-வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜு நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் கைவசம் கூட இத்தனை படங்கள் இல்லை. ஆனால் மமிதாவிற்கு கோலிவுட் சினிமாவில் வரவேற்பு அதிகரித்து உள்ளது. தமிழ் சினிமா மட்டும் இன்றி தொடர்ந்து தென்னிந்திய சினிமாவிலும் படங்களில் நடிக்க கமிட்டாகி வருகிறார் மமிதா பைஜு என்பது குறிப்பிடத்தக்கது.