AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கத்தி படத்தின் வெற்றி… அனிருத்திற்கு விஜய் கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட் என்ன தெரியுமா?

Music Director Aniruth: பான் இந்தியா அளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் இசையமைப்பாளர் அனிருத். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி இருந்தாலும் இவர் தொடர்ந்து பல மொழிகளில் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விஜய் தனக்கு கொடுத்த பரிசு குறித்து அனிருத் பேசியது கவனம் பெற்று வருகின்றது.

கத்தி படத்தின் வெற்றி… அனிருத்திற்கு விஜய் கொடுத்த ஸ்பெஷல் கிஃப்ட் என்ன தெரியுமா?
அனிருத், விஜய்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 22 Jun 2025 14:32 PM IST

கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்தியா அளவில் பிரபல இசையமைப்பாளராக கொடிக்கட்டிப் பறப்பவர் அனிருத் ரவிசந்திரன் (Anirudh Ravichander). இவர் அனைத்து மொழிகளிலும் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் அளித்தப் பேட்டி ஒன்றில் கத்தி படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தப் பிறகு நடிகர் விஜய் (Actor Vijay) அனிருத்திற்கு பரிசு ஒன்றை அளித்ததாக தெரிவித்துள்ளார். அது தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகின்றது. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்து வெளியான படம் கத்தி. இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்திரன் இசையமைத்து இருந்தார். இது அனிருத் விஜயுடன் இணைந்து பணியாற்றிய முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத்திற்கு விஜய் கொடுத்த சர்ப்ரைஸ் கிஃப்ட்:

இந்தப் படத்தில் வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. காதல் பாடல் முதல் செண்டிமெண்ட் பாடல் வரை அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. குறிப்பாக யார் பெற்ற மகனோ என்ற பாடலை விஜய் ரசிகர்கள் சிலாகித்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் ஆல்பம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து விஜய் ஒரு பரிசை அன்பளிப்பாக அனிருத்திற்கு அளித்துள்ளார்.

அது ஒரு பியானோ. அந்த பியானோவில் அமர்ந்து பல முறை பாடல்களை இசைத்து உள்ளதாகவும், படங்களுக்கு சில டியூன்களை அமைக்கும் போது அந்தப் படக்குழுவினரிடையே இது விஜய் சார் கொடுத்த கிஃப்ட் என்று கூறி மகிழ்ச்சி அடைவதும் உண்டு என்று இசையமைப்பாளர் அனிருத் தெரிவித்துள்ளார்.

அனிருத் இசையில் வெளியான விஜய் படங்கள் என்னென்ன?

கத்தி படத்தில் இந்த கூட்டணி முதன்முறையாக இணைந்து இருந்தாலும் அதனைத் தொடர்ந்து மாஸ்டர், பீஸ்ட், லியோ படங்களுக்கு இசையமைத்த அனிருத் தற்போது விஜயின் இறுதிப் படமான ஜன நாயகன் படத்திற்கும் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது. முன்னதாக வெளியான படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தது போல ஜன நாயகன் படமும் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நடிகர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி அனிருத் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Follow Us