Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Jana Nayagan : தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. ‘ஜன நாயகன்’ படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்!

Thalapathy Vijays Birthday Special Jana Nayagan New Poster : கோலிவுட் சினிமாவின் தளபதி விஜய்யின் நடிப்பில் இறுதியாக உருவாகிவரும் திரைப்படம் ஜன நாயகன். இந்நிலையில் இன்று 2025, ஜூன் 22 ஆம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜன நாயகன் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

Jana Nayagan : தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. ‘ஜன நாயகன்’ படக்குழு வெளியிட்ட நியூ போஸ்டர்!
ஜன நாயகன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 22 Jun 2025 14:42 PM

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகனாக சினிமாவில் கலக்கி வருபவர் தளபதி விஜய் (Thalapathy Vijay). இவரின் நடிப்பில் இதுவரை எக்கச்சக்க படங்கள் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை பெற்றிருக்கிறது. இதை தொடர்ந்து இவரின் நடிப்பில் உருவாகியிருக்கும் 69வது திரைப்படம்தான் ஜன நாயகன் (jana Nayagan) . இந்த படத்தை அஜித்தின் துணிவு திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கியுள்ளார். தளபதி விஜய்யின் இறுதி திரைப்படமாக இந்த ஜன நாயகன் திரைப்படமானது உருவாக்கி வருகிறது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே (Pooja Hgede) நடித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய்யுடன் பீஸ்ட் (Beast)  படத்தில் இணைந்து நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கேவிஎன் ப்ரொடக்ஷ்ன்ஸ் (KVN Productions) தயாரிப்பில் மிகப் பிரம்மாண்டமாக இந்த ஜன நாயகன் படமானது தயாராகிவருகிறது. இலையில் இன்று 2025, ஜூன் 22ம் தேதியில் தளபதி விஜய்யின் 51வது பிறந்தநாளை (Thalapathy Vijay’s Birthday) முன்னிட்டு படத்தின் முதல் அறிமுக வீடியோ நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகியிருந்தது.

அதைத் தொடர்ந்து விஜய் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிக்கும் வண்ணம் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. விஜய் போலீஸ் அதிகாரி உடையில் இருக்கும்படி உள்ள இப்படத்தின் போஸ்டர் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட விஜய் பர்த்டே ஸ்பெஷல் போஸ்டர் :

ஜன நாயகன் திரைப்படத்தின் கதைக்களம் இதுவா?

நடிகர் விஜய்யின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் இந்த ஜன நாயகன் படத்தின் ஷூட்டிங்கை விஜய் முழுவதுமாக முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து தமிழக அரசியலில் முழுவதுமாக இறங்கவுள்ளார் விஜய். இந்நிலையில் அவரின் இறுதி திரைப்படமாகக் கருதப்படும் இப்படத்தின் மீது மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படமானது தெலுங்கு நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருந்த பகவந் கேசரி படத்தின் ரீமேக் என்று பலரும் கூறி வருகின்றனர்.

அந்த எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. இந்த ஜன நாயகன் படமானது அரசியல் சார்ந்த கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியிருக்கிறதாம். இந்த படத்தில் அதிரடி ஆக்ஷ்ன் காட்சிகளில் விஜய் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்திருந்தாலும் வரும் 2026, ஆண்டு ஜனவரி 9ம் தேதியில்தான் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

அனிருத்தின் இசையமைப்பு

இந்த படத்தில் விஜய்யுடன் பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். முக்கிய வேடங்களில் நடிகர்கள் பாபி தியோல், பிரகாஷ் ராஜ், நரேன், பிரியாமணி மற்றும் மமிதா பைஜூ என பல பிரபலங்கள் நடித்திருக்கின்றனர் . விஜய்யின் கடைசி படம் என்ற நிலையில் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர்தான் இசையமைத்து வருகிறார்.

இவரின் இசையமைப்பில் விஜய்யின் அறிமுக வீடியோ வெளியாகிப் படு வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இடம் பெற்றிருக்கும் “தி ட்ரு லீடர்” என்ற பிஜிஎம் பாடலானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் அனிருத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் வெகு விரைவில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட்டும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.