Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Thalapathy Vijay : தளபதி விஜய்யின் பர்த்டே ஸ்பெஷல்… வாழ்த்து வீடியோவை வெளியிட்ட லியோ படக்குழு!

Thalapathy Vijays Birthday Special Video : கோலிவுட் சினிமாவில் முன்னணி உச்ச நட்சத்திரமாக இருந்து வருபவர் தளபதி விஜய். இவரின் இறுதி படமாக ஜன நாயகன் உருவாகிவருகிறது. இந்நிலையில் 2025, ஜூன் 22ம் தேதியில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு முன் கொண்டாட்டமாக லியோ படக்குழு ஸ்பெஷல் வீடியோவை வெளியிட்டுள்ளது.

Thalapathy Vijay : தளபதி விஜய்யின் பர்த்டே ஸ்பெஷல்… வாழ்த்து வீடியோவை வெளியிட்ட லியோ படக்குழு!
தளபதி விஜய்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 21 Jun 2025 19:54 PM

நடிகர் விஜய்யின் (Vijay) முன்னணி நடிப்பில் தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் வெளியாகி ஹிட்களை கொடுத்திருக்கிறது. அந்த வகையில் படங்களில் நடிப்பதைத் தொடர்ந்து விஜய் முழுவதுமாக அரசியலில் இறங்கவுள்ளார். இவரின் நடிப்பில் கடைசி திரைப்படமாக ஜன நாயகன் (Jana Nayagan)  உருவாகிவருகிறது. இந்த படத்தை இயக்குநர் ஹெச். வினோத் (H. Vinoth) இயக்கியுள்ளார். இந்த படமானது வரும் 2026, ஆண்டு ஜனவரி 9ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்துதான் நடிகர் விஜய் முழுவதுமாக அரசியலில் இறங்கவுள்ளார். இந்நிலையில், 2025, ஜூன் 22ம் தேதியில் தளபதி விஜய்யின் பிறந்தநாள் (Thalapathy Vijay’s birthday). அவரின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு ஜன நாயகன் படத்திலிருந்து முதல் சிங்கிள் வெளியாகிறது. இந்நிலையில் அவரின் பிறந்தநாளை ரசிகர்கள் பலரும் கொண்டாடத் தொடங்கியுள்ளனர் .

இந்நிலையில், விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ (leo)  தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ  (7 Screen Studio) தயாரிப்பு நிறுவனம் ஸ்பெஷல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. தளபதி விஜய்யின் சினிமாவின் கடந்துவந்த கதாபாத்திரங்களின் பாதையை வெளிப்படுத்தும் விதத்தில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் வெளியிட்ட தளபதி விஜய் ஸ்பெஷல் வீடியோ ;

லியோ ஹிட் :

கடந்த 2023ம் ஆண்டு தளபதி விஜய்யின் முன்னணி நடிப்பில் வெளியான படம் லியோ. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் இந்த படமானது மிகவும் அருமையாகவே இருந்தது. இப்படமானது கடந்த 2023ம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தில் விஜய்யுடன் நடிகை திரிஷா கிருஷ்ணன் இணைந்து நடித்திருந்தார். பல வருடங்களுக்குப் பின் இந்த ஜோடி இப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இந்தப் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் தி கோட் படத்தில் இணைந்தார். இப்படமும் பல கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்திருந்தது.

விஜய்யின் இறுதி படம் ;

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகிவரும் படம் தான்  ஜன நாயகன். இப்படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பை விஜய் மற்றும் பூஜா ஹெக்டே முழுமையாக நிறைவு செய்துள்ளனர். இந்த படமானது முற்றிலும் பான் இந்தியப் படமாக உருவாகி வருகிறது. இதில் பல தென்னிந்தியப் பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். அனிருத்தின் இசையமைப்பில் உருவாகிவரும் இப்படத்தில் முதல் பாடல் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகிறது. அதைத் தொடர்ந்து இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளும் வெளியாகவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.