அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் கடல் வழி அருகே இந்திய கேப்டன் மற்றும் 33 கடற்படையினர் சிக்கியுள்ளனர். இதனால் அவர்களின் குடும்பங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன. மும்பை தஹிசார் ஈஸ்ட் பகுதியில் வசிக்கும் கேப்டன் விரேந்திர விஷ்வகர்மா, எல்பிஜி ஏற்றிச் சென்ற டாங்கர் கப்பலில் 33 பேர் கொண்ட குழுவுடன் கடந்த மார்ச் 2 முதல் அந்த பகுதியில் சிக்கியுள்ளார். கப்பலில் இருந்து பேசும் கேப்டன் விஷ்வகர்மா, கிட்டத்தட்ட தினமும் வானில் ட்ரோன்கள் பறப்பதை பார்க்கிறோம். சைரன் சத்தம் தொடர்ந்து கேட்கிறது.