Jana Nayagan : என் நெஞ்சில் குடியிருக்கும்.. ‘ஜன நாயகன்’ படத் தளபதி விஜய்யின் அறிமுக வீடியோ வெளியானது!
Thalapathy Vijay Birthday Special Jana Nayagan Update : இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகிவரும் படம் ஜன நாயகன். தளபதி விஜய்யின் இறுதி திரைப்படம் என்பதால் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இன்று 2025, ஜூன் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு ஜன நாயகன் படத்திலிருந்து முதல் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.

கோலிவுட் சினிமாவில் ஒட்டுமொத்த ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் படம்தான் ஜன நாயகன் (Jana Nayagan). இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகர் தளபதி விஜய் (Thalapathy Vijay) முன்னணி நாயகனாக நடித்திருக்கிறார். இந்த படமானது கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதத்திலே தளபதி69 (Thalapathy 69) என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழில் கார்த்தி மற்றும் அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை இயக்கிய ஹெச். வினோத் (H. Vinoth) இந்த ஜன நாயகன் படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த 2024 நவம்பர் மாத இறுதியில் தொடங்கியிருந்த நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பாக நடைபெற்று வந்தது. இந்த திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே (Pooja Hegde) நடித்துள்ளார். இவர் இந்த படத்தின் மூலம் விஜய்யுடன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ளார் எனது குறிப்பிடத்தக்கது. கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் (KVN Productions) தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh Ravichander) இசையமைத்துவருகிறார்.
இவரின் இசையமைப்பில் விஜய்யின் இறுதி படமான ஜன நாயகன் வெறித்தனமாக தயாராகிவருகிறது. மேலும் இப்படமானது வரும் 2026ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இன்று 2025, ஜூன் 22ம் தேதியில் விஜய்யின் பிறந்தநாளை (Vijay’s Birthday) முன்னிட்டு ஜன நாயகன் படத்திலிருந்து முதல் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது. இது தற்போது விஜய்யின் பிறந்தநாளின் ட்ரீட்டாக ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது.




தளபதி விஜய்யின் ஜன நாயகன் படக்குழு வெளியிட்ட முதல் அறிமுக வீடியோ அறிவிப்பு :
Engal nenjil kudiyirukkum.. ❤️
Happy Birthday Lion #Thalapathy @actorvijay sir 🔥
The First Roar ▶️ https://t.co/Q981uzk8jA#HBDThalapathyVijay#JanaNayaganTheFirstRoar #JanaNayagan#HVinoth @hegdepooja @anirudhofficial @thedeol @_mamithabaiju @prakashraaj @menongautham… pic.twitter.com/5IgRaHIoxC
— KVN Productions (@KvnProductions) June 21, 2025
ஜன நாயகன் படத்தின் நடிகர்கள் மற்றும் பட்ஜெட் :
தளபதி விஜய்யின் இறுதி திரைப்படம் என்பதால் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவருகிறது. இந்த படத்தில் முக்கிய வில்லனாக நடிகர் பாபி தியோல் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே அனிமல் மற்றும் கங்குவா போன்ற படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். இந்நிலையில் அதைத் தொடர்ந்து ஜன நாயகன் படத்திலும் முக்கிய ரோலில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் நரேன், பிரகாஷ் ராஜ், வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹாசன், மமிதா பைஜூ, மோனிஷா பிலெஸி, கவுதம் வாசுதேவ் மேனன், ரேவதி எனப் பல பிரபலங்கள் இந்த படத்தில் இணைந்த நடித்துள்ளனர்.
இந்த படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்ததாகக் கூறப்படும் நிலையில், அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஜன நாயகன் படமானது விஜய்யின் இறுதி படம் என்பதால் மிகவும் பல கோடி பட்ஜெட்டில் உருவாகியிருக்கிறது. இப்படம் சுமார் ரூ 400 கோடிகளில் உருவாகியிருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிப்பதற்கு விஜய் சுமார் ரூ 275 கோடி சம்பளம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.