Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

DNA : ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.. அதர்வாவின் ‘டிஎன்ஏ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

DNA Movie OTT Release Update : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நாயகனாக இருந்து வருபவர் அதர்வா. இவரின் முன்னணி நடிப்பில் பல வருடங்களுக்குப் பின் நல்ல வரவேற்பைப் பெற்றுவரும் படம்தான் டிஎன்ஏ. திரையரங்குகளில் வெளியான இப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகிறது என்பதைப் பற்றி பார்க்கலாம்.

DNA : ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு.. அதர்வாவின் ‘டிஎன்ஏ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?
அதர்வா டிஎன்ஏ படம்Image Source: X
barath-murugan
Barath Murugan | Published: 22 Jun 2025 19:35 PM

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக பல படங்களை நடித்து வருபவர் அதர்வா (Athrvaa). இவர் பிரபல நடிகர் முரளியின் (Murali) மூத்த மகன் ஆவார். இவரும் தனது தந்தையைப் போல சினிமாவில் முன்னணி நாயகனாகப் படங்களில் நடித்து வருகிறார். இவர் கடந்த 2010ம் ஆண்டு வெளியான பானா காத்தாடி (Baana Kaathadi)  என்ற திரைப்படத்தில் நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படத்தின் வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களிலும் நாயகனாகவே தனது நடிப்பைத் தொடர்ந்தார். இவருக்கு ஈட்டி, பரதேசி, இமைக்கா  நொடிகள் மற்றும் ஜெமினி கணேசனும் சுருளி ராஜனும் போன்ற படங்கள் நல்ல வரவேற்பைக் கொடுத்திருந்தது. அந்த படங்களைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் கடந்த 2025, ஜூன் 20ம் தேதியில் வெளியான படம் டிஎன்ஏ (DNA).

இந்த படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் (Nelson Venkatesan)  இயக்கியுள்ளார். இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயனும் (Nimisha Sajayan)  நடித்துள்ளார். தனுஷின் குபேரா (Kuberaa) படத்துடன் திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படம் திரையரங்குகளில் பார்க்க மிஸ் செய்யக்கூடாத படம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த படமானது வரும் 2025, ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் “ஜியோ ஹாட்ஸ்டார்” (Jio Hotstar)  ஓடிடியில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஎன்ஏ படக்குழு வெளியிட்ட ரீசென்ட் எக்ஸ் பதிவு :

திரையரங்குகளில் வரவேற்பை பெரும் டிஎன்ஏ திரைப்படம் :

நடிகர் அதர்வாவின் இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே தமிழில் ஒருநாள் கூத்து , மான்ஸ்டர், மற்றும் ஃப்ர்ஹானா போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். இவரின் இயக்கத்தில் இந்த டிஎன்ஏ படமானது சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கிறது. இந்த படத்தில் அதர்வாவிற்கு ஜோடியாக இரு நடிகைகள் நடித்துள்ளனர். அதில் முக்கிய நடிகையாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை நிமிஷா சஜயனின் நடிப்பும் பிரம்மதமாக இருக்கிறது என்றே கூறலாம். சித்தா படத்தை ஒப்பிடும்போது, இந்த படத்தில் இவருக்கு முக்கியத்துவம் அதிகமாக இருக்கிறது.

இந்த படமானது முற்றிலும் க்ரைம் திரில்லர் மற்றும் காதல் கதைக்களத்துடன் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் ரிலிஸின் போதுதான் தனுஷின் குபேரா திரைப்படமும் திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. தனுஷின் இப்படம் பான் இந்தியா பாடம் என்பதால் இப்படத்திற்கு பெரும் வரவேற்பது இருக்கிறது. அதையும் கடந்து மக்கள் அதர்வாவின் டிஎன்ஏ படத்திற்கு தங்களின் வரவேற்புகளைக் கொடுத்து வருகின்றனர்.