Mamitha Baiju : நடிகை மமிதா பைஜூ பர்த்டே.. ‘சூர்யா 46’ படக்குழு வெளியிட்ட போஸ்டர்!
Mamitha Baijus Birthday Special Suriya 46 Movie Poster : மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகியாக நடித்து, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபலமானவர் நடிகை மமிதா பைஜூ. இவருக்கு இன்று 2025, ஜுன் 22ம் பிறந்தநாள். இவரின் 24வது பிறந்தநாளை முன்னிட்டு சூர்யா46 படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) . இவர் மலையாள சினிமாவில் துணை நட்சத்திரமாகத் தனது நடிப்பைத் தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் கதாநாயகியாகவே நடிக்கத் தொடங்கிவிட்டார். கடந்த 2024ம் ஆண்டு வெளியான பிரேமலு (Premalu) என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான இவர், தொடர்ந்து பல படங்களில் நடிக்கத் தொடங்கினார். ஜி.வி. பிரகாஷ் குமாரின் ரெபெல் (Rebel) என்ற படத்தில் கதாநாயகியாகத் தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் தமிழில் ஒப்பந்தமானார். மேலும் இவர் விஜய்யின் (Vijay) நாயகன் (Jana Nayagan) படத்திலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் மொழியை அடிப்படியாகக் கொண்டு உருவாகிவரும் சூர்யா 46 (Suriya46) படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங் பூஜைகள் கடந்த 2025, மே மாதத்தின் இறுதியில் நடைபெற்றது. இதை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று 2025, ஜூன் 22ம் தேதியில் மமிதா பைஜூவின் 24வது பிறந்தநாளை (Mamitha Baijus Birthday) முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதத்தில், படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.




சூர்யா46 படக்குழு வெளியிட்ட மமிதா பைஜூ நிய போஸ்டர் :
Wishing the ever-charming @_mamithabaiju a very Happy Birthday! – Team #Suriya46 ✨
Here’s to another year of lighting up the screens and hearts. 🤩#HBDMamithaBaiju 🎶@Suriya_offl #VenkyAtluri @realradikaa @TandonRaveena @gvprakash @vamsi84 @NimishRavi @NavinNooli… pic.twitter.com/wZDDnG4rpi
— Sithara Entertainments (@SitharaEnts) June 22, 2025
சூர்யா 46 திரைப்படம் :
சூர்யாவின் இந்த 46வது திரைப்படத்தை இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே லக்கி பாஸ்கர் மற்றும் வாத்தி போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதை தொடர்ந்துதான் சூர்யாவின் 46வது படத்தை இயக்கிவருகிறார். இந்த படமானது கமர்ஷியல் திரைப்படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக மமிதா பைஜூ இணைந்து நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பிரம்மாண்டமாக நடைபெற்று வரும் நிலையில் , வரும் 2026ம் ஆண்டு கோடைகாலத்தில் இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.
டியூட் திரைப்படம் ;
நடிகரும், இயக்குநருமான பிரதீப் ரங்கநாதனின் 4வது திரைப்படம்தான் இந்த டியூட். இந்த படத்தை அறிமுக இயக்குநர் கீர்த்தீஷ்வரன் இயக்கி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்ததாகக் கூறப்படும் நிலையில், தொடர்ந்து அடுத்த கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இந்த படமானது இந்த 2025ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது