AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா ரத்து..! பக்தர்கள் அதிர்ச்சி

Thirupparankundram Panguni Festival: திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழாவில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகள் தேர்தல் நன்னடத்தை விதிகளால் ரத்து செய்யப்பட்டன. பட்டிமன்றம், இன்னிசை, மாணவர்களின் நடனங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இம்முறை நடைபெறாது. ஆனால் 2026 மார்ச் 23 முதல் ஏப்ரல் 6 வரை திருவிழா வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றம் பங்குனி திருவிழா ரத்து..! பக்தர்கள் அதிர்ச்சி
திருப்பரங்குன்றம் முருகன் கோவில்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 19 Mar 2026 10:25 AM IST

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் பங்குனி திருவிழா ஆண்டுதோறும் 15 நாட்கள் விமரிசையாக நடைபெறும் முக்கிய நிகழ்வாகும். இந்த திருவிழாவில் கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள் வழக்கமாக நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர்களின் ஒயிலாட்டம், மயிலாட்டம் போன்ற நடனங்களும் இடம்பெறும். இந்த ஆண்டும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, உபயதாரர்கள் முன்வந்தனர். ஆனால் சட்டமன்ற தேர்தல் நன்னடத்தை விதிகளால் அனைத்து கலைநிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இருப்பினும் 2026 மார்ச் 23 முதல் ஏப்ரல் 6 வரை திருவிழா வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவிழாவின் பாரம்பரியம்

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 15 நாட்கள் விமரிசையாக நடப்பது வழக்கம். இந்த திருவிழாவின்போது சன்னதிதெருவில் 16 கால் மண்டபம் வளாகத்தில் 15 நாட்களும் கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், இன்னிசை நிகழ்ச்சிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளின் ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நடனங்கள், பக்தி சொற்பொழிவுகள் நடைபெறுவது வழக்கம். இந்த நிகழ்ச்சிகள் பக்தர்களுக்கு ஆன்மிகத்துடன் கூடிய கலாச்சார அனுபவத்தை வழங்கி, திருவிழாவை மேலும் சிறப்பாக மாற்றி வந்தன.

நிகழ்ச்சிகளுக்கான முன்னேற்பாடுகள்

இந்த ஆண்டும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பக்தி சொற்பொழிவுகள் நடத்திட உபயதாரர்கள் முன்வந்தனர். வழக்கம் போல உபயதாரர்கள் நடத்தக்கூடிய நிகழ்ச்சிகளுக்காக சிறப்பு அழைப்பிதழ் தயார்படுத்தும் பணியில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டு வந்தது. இதன் மூலம் திருவிழா வழக்கம்போல் சிறப்பாக நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. பலரும் ஆர்வத்துடன் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கத் தயாராக இருந்தனர்.

தேர்தல் காரணமாக ரத்து

இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது. இதை முன்னிட்டு தேர்தல் நன்னடத்தை விதிக்கு உட்பட்டு பங்குனி திருவிழாக்கான கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், பக்தி சொற்பொழிவுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தேர்தல் காலத்தில் அரசின் விதிமுறைகள் கடுமையாக அமலில் இருப்பதால், பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

திருவிழா நடைபெறும் அட்டவணை

அதேசமயம் வருகிற 2026 மார்ச் 23-ந்தேதி முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை 15 நாட்களும் வழக்கம்போல பங்குனி திருவிழா விமரிசையாக நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர். கலைநிகழ்ச்சிகள் இல்லாதபோதிலும், மத சார்ந்த வழிபாடுகள் மற்றும் முக்கிய திருவிழா நிகழ்வுகள் அனைத்தும் வழக்கம்போல் நடைபெறும் என்பதால், பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us