AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சமைக்கும் போது பிரஷர் குக்கர் வெடிக்காமல் இருக்க இதை செய்யுங்க..!

Cooker Gasket Cleaning: பிரஷர் குக்கர் கேஸ்கட்டில் ஏற்படும் துர்நாற்றம் மற்றும் பிசுக்கைப் போக்க வினிகர், பேக்கிங் சோடா மற்றும் எலுமிச்சை போன்ற இயற்கை பொருட்கள் பெரிதும் உதவுகின்றன. கேஸ்கட்டை மெதுவாகக் கழற்றி வினிகர் நீரில் ஊறவைத்துத் தேய்ப்பதன் மூலம் கறைகளும் துர்நாற்றமும் முற்றிலும் நீங்கிவிடும். சுத்தம் செய்த கேஸ்கட்டை நன்றாகக் காயவைத்து மீண்டும் பயன்படுத்துவதுடன், ரப்பர் தளர்ந்தால் உடனடியாகப் புதியதை மாற்றுவது பாதுகாப்பானது.

சமைக்கும் போது பிரஷர் குக்கர் வெடிக்காமல் இருக்க இதை செய்யுங்க..!
குக்கர் கேஸ்கட் சுத்தம்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 14 Aug 2026 10:38 AM IST

பிரஷர் குக்கர் கேஸ்கட்டில் சேரும் உணவுத் துகள்கள் மற்றும் எண்ணெய் பிசுக்கால் துர்நாற்றம் வீசுவதோடு நீராவி கசிவும் ஏற்படும். இதைத் தவிர்க்க வெதுவெதுப்பான நீர், வினிகர் மற்றும் பேக்கிங் சோடா போன்ற இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி எளிதாகச் சுத்தம் செய்யலாம். முதலில் ஆறிய குக்கரில் இருந்து கேஸ்கட்டை மெதுவாகக் கழற்றி, வெதுவெதுப்பான நீரில் படிந்துள்ள அழுக்குகளைக் கழுவ வேண்டும். பின்னர் வினிகர் கலந்த நீரில் சிறிது நேரம் ஊறவைத்து, பேக்கிங் சோடா அல்லது எலுமிச்சைப் பழம் கொண்டு தேய்ப்பதால் துர்நாற்றம் முற்றிலும் அகலும். வீரியமிக்க ரசாயனங்கள் அல்லது ஸ்டீல் நார் கொண்டு தேய்ப்பதைத் கண்டிப்புடன் தவிர்க்க வேண்டும். சுத்தம் செய்த பிறகு துணியால் துடைத்து, கேஸ்கட் நன்றாகக் காய்ந்த பிறகே மீண்டும் குக்கரில் பயன்படுத்த வேண்டும்.

சமையலறையில் கேஸ்கட் பராமரிப்பின் அவசியம்

ஒவ்வொரு வீட்டிலும் தினசரி சமையலுக்குப் பயன்படும் பிரஷர் குக்கர்களில், அதன் ‘கேஸ்கட்’ எனப்படும் ரப்பர் வளையம் மிக முக்கியப் பங்க வகிக்கிறது. தொடர்ச்சியான பயன்பாட்டினால் அதில் உணவுத் துகள்கள், எண்ணெய் பிசுக்கு மற்றும் ஈரப்பதம் தேங்கி துர்நாற்றம் வீசத் தொடங்கும். இதனால் நீராவி கசிவு ஏற்பட்டு, குக்கர் மூடி சரியாகப் பொருந்தாமல் போக வாய்ப்புள்ளது. எனவே, வீட்டில் உள்ள இயல்பான பொருட்களைக் கொண்டு இந்த கேஸ்கட்டைப் பாதுகாப்பாகவும் சுத்தமாகவும் பராமரிப்பது அவசியமாகும்.

சுத்தம் செய்யத் தேவையான இயற்கை பொருட்கள்

குக்கர் கேஸ்கட்டில் உள்ள கரை மற்றும் துர்நாற்றத்தை நீக்க அதிக செலவில்லாத எளிய பொருட்கள் போதுமானவை. இதற்கு வெதுவெதுப்பான நீர், பாத்திரம் கழுவும் திரவம், வெள்ளை வினிகர், பேக்கிங் சோடா, அரை எலுமிச்சை பழம் மற்றும் ஒரு மென்மையான ஸ்பாஞ்ச் அல்லது பழைய டூத் பிரஷ் ஆகியவை தேவைப்படும். கடுமையான ரசாயனங்கள் ரப்பரின் தன்மையைப் பாதிக்கும் என்பதால், இவற்றைத் தவிர்ப்பது நல்லது.

கேஸ்கட் சுத்தம் செய்யும் எளிய வழிமுறைகள்

முதலில் குக்கர் நன்றாக ஆறியதும் கேஸ்கட்டைப் பலமாக இழுக்காமல் மெதுவாகக் கழற்ற வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவி, பாத்திரம் கழுவும் திரவம் மற்றும் வினிகர் கலந்த நீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். தொடர்ந்து, பேக்கிங் சோடா பேஸ்ட் அல்லது எலுமிச்சைப் பழத்தைக் கொண்டு தேய்ப்பதன் மூலம் துர்நாற்றம் முற்றிலும் நீங்கும். இறுதியாக, தூய்மையான துணியால் துடைத்து நன்றாகக் காயவைத்த பிறகே மீண்டும் குக்கரில் பயன்படுத்த வேண்டும்.

Also Read: பதற்றமில்லா காலை நேரம்: சமையலை சட்டென்று முடிக்க எளிய டிப்ஸ்!

தவிர்க்க வேண்டிய தவறுகள் மற்றும் மாற்றும் காலம்

கேஸ்கட்டைச் சுத்தம் செய்ய ப்ளீச் போன்ற வீரியமிக்க ரசாயனங்கள் அல்லது ஸ்டீல் நார் போன்றவற்றை பயன்படுத்தக் கூடாது. அதேபோல ஈரப்பதத்துடன் குக்கரில் மாட்டுவதோ, நேரடி வெயிலில் அதிக நேரம் உலர்த்துவதோ கூடாது. ரப்பரில் விரிசல்கள் ஏற்படுதல், தளர்ந்து போதல் அல்லது தொடர்ந்து துர்நாற்றம் வீசுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாகப் புதிய கேஸ்கட்டை மாற்றுவது சமையல் பாதுகாப்பிற்கு மிகச் சிறந்ததாகும்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us