யுபிஐ மூலம் பணம் செலுத்தும் பொதுமக்களுக்கு எந்தவித பரிவர்த்தனைக் கட்டணமும் விதிக்கப்படாது என்று மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. சமீபத்தில் நாடாளுமன்ற மக்களவையில் பணம் செலுத்துதல் மற்றும் தீர்வு அமைப்புகள் தொடர்பான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, யுபிஐ மூலம் பணம் அனுப்புவதற்கு இனி கட்டணம் வசூலிக்கப்படுமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்தது.