பெங்களூருவில், வீட்டுக்குள் பெண் ஒருவர் உயிரிழந்து சுமார் ஒரு வருடத்திற்குப் பிறகு அவரது எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் பெங்களூருவின் பகலகுண்டே பகுதியில் உள்ள ஹவனூர் லேஅவுட்டில் நடந்துள்ளது. இங்கு உள்ள ஒரு இரட்டை அடுக்கு வீட்டில், 52 வயதான தாட்சாயிணி என்பவரின் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தாட்சாயிணி தனது கணவர் மற்றும் மகனை இழந்த பின்னர், தனியாக வசித்து வந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.