AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வீட்டில் பணம் கொட்டணுமா? இந்த வாஸ்து படங்களை மட்டும் மாட்டிப் பாருங்க!

Positive Energy: வீட்டில் செல்வச் செழிப்பையும் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்க நீர்வீழ்ச்சி, ஓடும் 7 குதிரைகள், உதிக்கும் சூரியன் மற்றும் யானை போன்ற வாஸ்து சிறப்புமிக்க ஓவியங்களை வைப்பது மிகச் சிறந்ததாகும். இவற்றை வடக்கு அல்லது கிழக்கு போன்ற சரியான திசைகளில் அமைப்பதன் மூலம் வற்றாத பணப்புழக்கம், தொழில் வளர்ச்சி மற்றும் நீண்ட கால அதிர்ஷ்டத்தைப் பெற முடியும்.

வீட்டில் பணம் கொட்டணுமா? இந்த வாஸ்து படங்களை மட்டும் மாட்டிப் பாருங்க!
வாஸ்து ஓவியங்கள்Image Source: pexels
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 14 Aug 2026 12:40 PM IST

வாஸ்து சாஸ்திரத்தின்படி வீட்டில் சரியான ஓவியங்களை வைப்பது குடும்பத்தில் செல்வச் செழிப்பையும் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும். நீர்வீழ்ச்சி மற்றும் ஓடும் 7 குதிரைகள் கொண்ட ஓவியங்கள் பணப்புழக்கத்தை அதிகரித்து, தொழிலில் தடையில்லாத வெற்றியை ஈர்க்கின்றன. தங்க நாணயங்கள், மணி ட்ரீ மற்றும் உதிக்கும் சூரியன் போன்ற படங்கள் புதிய வாய்ப்புகளையும் சேமிப்பையும் உயர்த்த பெரிதும் உதவுகின்றன. அதிர்ஷ்டத்தின் அடையாளமான கொய் மீன் மற்றும் பசுமை நிறைந்த மூங்கில் காடு ஓவியங்கள் குடும்பத்தில் நீண்ட கால பொருளாதார ஸ்திரத்தன்மையை வழக்கம். மயில் மற்றும் யானை ஓவியங்கள் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, ஞானத்தையும் சுபயோகத்தையும் சேர்க்கின்றன. இந்த சிறப்பு வாஸ்து ஓவியங்களை வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசைகளில் மாட்டுவது அதிக நன்மைகளைத் தரும். மாறாக, போர், சோகம் மற்றும் வறண்ட மரங்கள் போன்ற எதிர்மறை சூழலைக் காட்டும் ஓவியங்களை வீட்டில் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

பணப்புழக்கத்தை அதிகரிக்கும் நீர்வீழ்ச்சி மற்றும் ஓடும் 7 குதிரைகள்

வீட்டில் என்றும் வற்றாத பணப்புழக்கமும் செழிப்பும் நிலைத்திருக்க நீர்வீழ்ச்சி அல்லது ஓடும் நீர் போன்ற ஓவியங்களை வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் மாட்டுவது சிறந்தது. அதேபோல, தொழில் மற்றும் வியாபாரத்தில் அபார வளர்ச்சியையும் தொடர் வெற்றியையும் ஈர்ப்பதற்கு ‘ஓடும் 7 குதிரைகள்’ கொண்ட ஓவியம் மிகவும் சக்திவாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதனை வீட்டின் கிழக்கு அல்லது வடக்கு திசையில் அமைப்பது சுப பலன்களைத் தரும்.

நிதி வளர்ச்சியைத் தரும் மணி ட்ரீ, சூரிய உதயம் மற்றும் கொய் மீன்

தங்க நாணயங்கள், மணி ட்ரீ போன்ற ஓவியங்கள் சேமிப்பை உயர்த்தவும் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யவும் தெற்கு அல்லது கிழக்கு திசையில் வைக்கப்படுகின்றன. உதிக்கும் சூரியனின் ஓவியம் புதிய வாய்ப்புகளையும் தொழில் மேன்மையையும் கிழக்கு திசையில் வைக்கும்போது வழங்கும். மேலும், வடகிழக்கு திசையில் வைக்கப்படும் ‘கொய் மீன்’ ஓவியங்கள் அதிர்ஷ்டத்தையும் நிதி ரீதியான ஸ்திரத்தன்மையையும் கூட்டும்.

மகிழ்ச்சியையும் நிலைத்தன்மையையும் வழங்கும் மயில், மூங்கில் மற்றும் யானை

வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி, நேர்மறையான சூழலை உருவாக்க மயில் ஓவியங்கள் உதவுகின்றன. பசுமையான மூங்கில் காடு ஓவியம் நீண்ட கால நிலைத்தன்மையையும் சீரான வளர்ச்சியையும் குறிக்கிறது. ஞானம் மற்றும் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகத் திகழும் யானை ஓவியங்களை வடக்கு திசையில் அமைப்பது குடும்பத்தில் செல்வத்தையும் அதிகாரத்தையும் அதிகரிக்கச் செய்யும்.

Also Read: பெண்களுக்கு இடது கண் துடித்தால் அதிர்ஷ்டமா? சுவாரஸ்ய தகவல்!

தவிர்க்க வேண்டிய ஓவியங்கள்

வாஸ்து நியதிகளின்படி போர், வன்முறை, சோகம், வறண்ட மரங்கள் அல்லது அமைதியற்ற சூழலைக் வெளிப்படுத்தும் ஓவியங்களை வீட்டில் மாட்டுவதைத் தவிர்க்க வேண்டும். இவை எதிர்மறை எண்ணங்களையும் தேவையற்ற தடைகளையும் ஈர்க்கக்கூடும் என்பதால், எப்போதும் அமைதியும் மகிழ்ச்சியும் தரும் வண்ணமயமான இயற்கை ஓவியங்களைத் தேர்வு செய்வதே நன்மையளிக்கும்.

பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை வாஸ்து நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.

Follow Us