AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Watch Video: திருவான்மியூரில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் – தலைகீழாக கவிழ்ந்த கார்..

Road Cave In Chennai: சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே ஓஎம்ஆர் சாலையில் திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த பள்ளத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தை தொடர்ந்து பள்ளத்தில் கவிழ்ந்த காரை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

Watch Video: திருவான்மியூரில் சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளம் – தலைகீழாக கவிழ்ந்த கார்..
சாலையில் ஏற்பட்ட பள்ளம் – கவிழ்ந்த கார்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Oct 2026 12:06 PM IST

அக்டோபர் 8, 2026: சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே ஓஎம்ஆர் சாலையில் திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வழியாக வந்த வெள்ளை நிற கார் எதிர்பாராத விதமாக பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. காரில் இருந்த நபர் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

முக்கிய போக்குவரத்து வழித்தடம்:

திருவான்மியூர் டைடல் பார்க் பகுதி சென்னையின் முக்கிய போக்குவரத்து வழித்தடங்களில் ஒன்றாக உள்ளது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்களில் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். திருவான்மியூர், அடையாறு, கிண்டி, கோட்டூர்புரம், தேனாம்பேட்டை, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை இணைக்கும் முக்கிய சாலையாகவும் இது உள்ளது.

மெட்ரோ பணிகளால் ஏற்படும் பள்ளம்?

இந்தப் பகுதியில் கடந்த சில மாதங்களாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, போக்குவரத்தும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், மெட்ரோ பணிகள் நடைபெறும் பகுதிகளில் அடிக்கடி சாலையில் பள்ளங்கள் ஏற்படுவது வாகன ஓட்டிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே மத்திய கைலாஷ்–அடையாறு பகுதிகளிலும், தேனாம்பேட்டையிலும் சாலையில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு விபத்துகள் நிகழ்ந்த நிலையில், தற்போது திருவான்மியூர் டைடல் பார்க் அருகே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.

பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த கார்:

இந்நிலையில், சென்னை திருவான்மியூர் டைடல் பார்க் அருகே ஓஎம்ஆர் சாலையில் திடீரென மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த பள்ளத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தை தொடர்ந்து பள்ளத்தில் கவிழ்ந்த காரை அப்புறப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், பள்ளத்தை சீரமைக்கும் பணியில் மெட்ரோ ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அந்தப் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

போக்குவரத்து காவல்துறையினரும் சம்பவ இடத்தில் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மெட்ரோ பணிகள் நடைபெறும் சாலைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Follow Us