AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நவராத்திரி ரகசியம்: 9 நாட்களுக்கு உரிய பூக்களும் நைவேத்தியங்களும்!

Ambigai Worship: நவராத்திரி பண்டிகையானது அசுரர்களை அழித்து அறத்தை நிலைநாட்டிய அம்பிகையின் வெற்றியைப் போற்றும் நோக்கில் ஒன்பது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஒன்பது நாட்களிலும் துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களுக்குத் தாமரை, மல்லிகை, பாரிஜாதம் உள்ளிட்ட பிரத்யேக மலர்களால் அர்ச்சனை செய்யப்படுகிறது.

நவராத்திரி ரகசியம்: 9 நாட்களுக்கு உரிய பூக்களும் நைவேத்தியங்களும்!
நவராத்திரிImage Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 08 Oct 2026 06:00 AM IST

தீமையை அழித்து தர்மத்தை நிலைநாட்ட துர்க்கா தேவி போரிட்ட ஒன்பது நாட்களே நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் துர்க்கை, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளின் ஒன்பது வடிவங்கள் போற்றி வணங்கப்படுகின்றன. ஒன்பது நாட்களும் அம்பிகைக்கு உகந்த குறிப்பிட்ட மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். தாமரை, மல்லிகை, பாரிஜாதம், செம்பருத்தி மற்றும் ரோஜா போன்ற நறுமண மலர்கள் வழிபாட்டிற்குப் பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி, ஒவ்வொரு நாளும் தேவிக்கு வெண் பொங்கல், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் மற்றும் பாயசம் போன்ற பிரத்யேக உணவுகள் நைவேத்தியமாகப் படைக்கப்படுகின்றன. இறுதி நாளில் அக்காரவடிசல் மற்றும் தாமரை மலர்கள் கொண்டு அன்னைக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. முறையான வழிபாட்டின் மூலம் அம்பிகையின் அருளையும் அளப்பரிய நன்மைகளையும் பக்தர்கள் பெற முடியும் என்பது நம்பிக்கையாகும்.

முப்பெரும் தேவிகளின் வழிபாடு மற்றும் சிறப்பு அர்ச்சனை மலர்கள்

நவராத்திரியின் முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் அர்ப்பணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் அம்பிகையை மகிழ்விக்கப் பிரத்யேக மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும். முதல் நாளில் வெண்தாமரை, செந்தாமரை, மல்லிகை ஆகியவற்றாலும், இரண்டாம் நாளில் மல்லிகையாலும், மூன்றாம் நாளில் மரிக்கொழுந்து மற்றும் சம்பங்கியாலும் அர்ச்சனை செய்யப்படுகிறது. தொடர்ந்து நான்காம் நாளில் ஜாதிமல்லி, ஐந்தாம் நாளில் பாரிஜாதம் மற்றும் முல்லை, ஆறாம் நாளில் செம்பருத்தி, ஏழாம் நாளில் மல்லிகை மற்றும் முல்லை, எட்டாம் நாளில் ரோஜா, ஒன்பதாம் நாளில் செந்தாமரை மற்றும் வெண்தாமரை கொண்டு தேவியை வழிபடுவது வழக்கம்.

Also Read: அமாவாசை அன்று இந்த பொருட்களை மட்டும் வாங்காதீங்க…

நவராத்திரி ஒன்பது நாட்களுக்கான சிறப்பு நைவேத்தியங்கள்

ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நைவேத்தியங்களைப் படைப்பது வழிபாட்டின் முக்கிய அங்கமாகும். முதல் நாளில் வெண் பொங்கல், இரண்டாம் நாளில் புளியோதரை, மூன்றாம் நாளில் சர்க்கரைப் பொங்கல், நான்காம் நாளில் கதம்ப சாதம், ஐந்தாம் நாளில் தயிர் சாதம் ஆகியவை அன்னைக்குப் படைக்கப்படுகின்றன. அதைத் தொடர்ந்து ஆறாம் நாளில் தேங்காய் சாதம், ஏழாம் நாளில் எலுமிச்சை சாதம், எட்டாம் நாளில் சுவையான பாயசம் மற்றும் ஒன்பதாம் நாளில் அக்காரவடிசல் என ஒன்பது வகை உணவுகளைப் படைத்து அம்பிகையின் அருள் பெறலாம். இறுதி நாளில் அக்காரவடிசல் மற்றும் தாமரை மலர்கள் கொண்டு அன்னைக்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. முறையான வழிபாட்டின் மூலம் அம்பிகையின் அருளையும் அளப்பரிய நன்மைகளையும் பக்தர்கள் பெற முடியும் என்பது நம்பிக்கையாகும்.

பொறுப்புத்துறப்பு: இந்தக்கட்டுரை ஆன்மிக நம்பிக்கையின்படி எழுதப்பட்டது. இது அறிவியல் பூர்வமாக நிரூபணம் ஆனது அல்ல.

Follow Us