Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Vastu Tips

Vastu Tips

வாஸ்து குறிப்புகள்

சாஸ்திரங்களைப் பொறுத்தவரை வாஸ்து சாஸ்திரம் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இது நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்றாக இருப்பதாக கூறப்படுகிறது. வாஸ்து என்பது கட்டப்பட்டுள்ள அல்லது கட்டப்படவுள்ள நிலத்தை குறிக்கும் சொல்லாகும். வாஸ்து சாஸ்திரம் என்றால் ஒரு நிலத்தில் எந்த வகையான கட்டடமாக இருந்தாலும் சரி, அது எப்படி கட்டப்பட வேண்டும், அங்கு எந்த இடத்தில் என்ன அமைய வேண்டும் என்பதை தீர்மானிப்பதாகும். ஜோதிடத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்களிடையே வாஸ்துவில் மிகப்பெரிய சக்தி அடங்கியிருப்பதாக நம்புகிறார்கள். வாஸ்து சாஸ்திரம் கி.மு 3000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம் என நம்பப்படுகிறது. 4 வேதங்களில் கடைசியாக உள்ள அதர்வணத்தில் வாஸ்து சாஸ்திரம் பற்றி கூறப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு கட்டடத்தை வெறும் உயிரற்ற பொருளாக கருதுவதில்லை. மாறாக அது மனிதர்களுடன் உணர்வு ரீதியாக தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. நாம் இந்த தொகுப்பில் வாஸ்து சாஸ்திரம் பற்றிய தகவல்களை காணலாம்.

Read More

Vastu Tips: ஒர்க் ஃப்ரம் ஹோம் பிரச்னைகளை தீர்க்கும் வாஸ்து டிப்ஸ்!

வேலைத் துறையில் மன அழுத்தம், போட்டி, மற்றும் சவால்களை எதிர்கொள்ள வாஸ்து சாஸ்திரம் வழிகாட்டுகிறது. இயற்கையின் சமநிலையைப் பயன்படுத்தி தொழில் வளர்ச்சி, சிறந்த சம்பளம், மற்றும் மன திருப்தி பெற உதவும் 5 முக்கிய வாஸ்து குறிப்புகளை பற்றி நாம் இங்கு காணலாம்.

Navratri: நவராத்திரி காலம்.. கண்டிப்பாக பின்பற்ற வேண்டிய வாஸ்து விஷயங்கள்!

Navratri Vastu Tips: புரட்டாசி மாத நவராத்திரியில், லட்சுமி, சரஸ்வதி, துர்க்கை ஆகிய மூன்று தேவியரையும் வழிபடுவதற்கு வாஸ்து சாஸ்திரம் சில குறிப்புகளை வழங்குகிறது. இதனை பின்பற்றுவதால் எதிர்மறை சக்திகளை நீக்கி, நேர்மறையான ஆற்றலை ஈர்க்க இவை உதவும் என நம்பப்படுகிறது.

Vastu Tips: எக்காரணம் கொண்டும் வீட்டின் முன் வளர்க்கக்கூடாத 5 செடிகள்!

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டின் முன் சில தாவரங்களை வளர்ப்பது எதிர்மறை ஆற்றலைக் கொண்டுவரும். அரசமரம், முள்செடிகள், போன்சாய் செடி, உலர்ந்த செடிகள் மற்றும் புளியமரம் போன்றவை வீட்டின் முன் இருக்கக் கூடாது. இவை நிதிப் பிரச்சனைகள், குடும்பத் தகராறுகள் மற்றும் வேலை சம்பந்தமான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

குளித்த பிறகு செய்யக்கூடாதவை.. சனியால் பெரும் இழப்பு உண்டாகும்!

Vastu Tips in Tamil: குளியலறையின் சுத்தம் உடல் ஆரோக்கியம் மற்றும் ஜோதிட ரீதியான நன்மைகளை அளிக்கிறது. வாஸ்து சாஸ்திரப்படி, குளித்த பிறகு வாளியில் தண்ணீர் சேமிப்பது, ஈரமான துணிகளை விட்டுச் செல்வது, குளிக்கும் முன் திருத்தம் செய்த முடியை அங்கேயே விட்டு செல்வது போன்றவை தவறானவையாக பார்க்கப்படுகிறது.

Vastu Tips: வீட்டு வாசலில் வேப்ப மரம் இருக்கா?.. இனி பிரச்னைகள் விலகி ஓடும்!

சனி, கேது தோஷ நிவர்த்திக்கு வேப்ப மர வழிபாடு உதவும் என்பதும், வீட்டின் தெற்கு அல்லது மேற்குப் பகுதியில் வேப்ப மரம் நடுவதால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. செவ்வாய் கிரகத்தின் வடிவமாகக் கருதப்படும் வேப்ப மரம் தெற்கு திசையில் நட்டால் ஏராளமான பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Vastu Tips: பித்ரு பக்‌ஷ காலம் தொடக்கம்.. சொத்து வாங்குபவர்களே கவனம்!

Pitru Paksha 2025: பித்ரு பக்ஷம் என்பது இந்துக்களின் முன்னோர்களை வழிபடும் 15 நாள் காலகட்டமாகும். இந்த காலத்தில் புதிய சொத்துக்கள் வாங்குவது, பரிவர்த்தனைகள் செய்வது அசுபம் எனக் கருதப்படுகிறது. ரியல் எஸ்டேட் நடவடிக்கைகள் குறைவாக இருக்கும். நவராத்திரிக்குப் பிறகு சந்தைச் செயல்பாடு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vastu Tips: பணப் பிரச்னைகளை போக்கும் ஏலக்காய் வழிபாடு.. செய்வது எப்படி?

திரிகோண யாலகுல தீப உபயம் என்ற பரிகாரம் நிதிப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண உதவும் என நம்பப்படுகிறது. வெள்ளிக்கிழமை 108 ஏலக்காய்களைப் பயன்படுத்தி, ஓம் என்ற எழுத்தில் அர்ச்சனை செய்ய வேண்டும். 21 நாட்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தைச் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vastu Tips: வீட்டில் இந்த திசையில் புத்தர் சிலை இருந்தால் செல்வம் கொட்டும்!

வாஸ்து சாஸ்திரப்படி, வீட்டில் புத்தர் சிலையை வைப்பது நல்ல அதிர்ஷ்டத்தையும் அமைதியையும் தரும். வடக்கு அல்லது கிழக்கு நுழைவாயிலில், பூஜையறையில் அல்லது பிரம்மஸ்தானத்தில் வைக்கலாம். குழந்தைகள் அறையில் வைப்பதால் கல்வி ஞானம் பெருகும் என நம்பப்படுகிறது. சிரிக்கும் புத்தர் சிலையை கிழக்கு திசையில் வைத்தால் மகிழ்ச்சி அதிகரிக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

Vastu Tips: சாமந்தி பூ செடியை இந்த திசையில் வீட்டில் நட்டால் அதிர்ஷ்டம்!

சாமந்தி செடி, இந்து மதத்தில் புனிதமானதாகக் கருதப்பட்டு, பூஜைகளில் பயன்படுத்தப்படுகிறது. வாஸ்து சாஸ்திரப்படி, வடகிழக்கு, கிழக்கு அல்லது வடக்கு திசைகளில் சாமந்தி செடியை வைப்பது செல்வம், செழிப்பு, நேர்மறை ஆற்றலை ஈர்க்கும் என நம்பப்படுகிறது. சரியான திசையில் வைப்பதன் மூலம் வீட்டு வாஸ்து குறைபாடுகளை நீக்கி, மகிழ்ச்சியையும் செழிப்பையும் பெறலாம்.

வீட்டுல பிரச்னையா இருக்கா? – வாஸ்து குறைபாடு காரணமா இருக்கலாம்!

வீட்டு வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் வாஸ்து சாஸ்திரத்தின் முக்கியத்துவம் அளப்பரியது. பிரதான நுழைவாயில், சமையலறை, படுக்கையறை, கழிப்பறை ஆகியவற்றின் சரியான அமைவிடம் செழிப்பையும், தவறான அமைவிடம் நிதி மற்றும் சுகாதாரப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vastu Tips: கிருஷ்ண ஜெயந்தி நாளில் பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள்!

Gokulashtami Vastu Tips: 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கோகுலாஷ்டமி வழிபாட்டில் வாஸ்து விதிகளை பின்பற்றுவது முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. கிருஷ்ணரின் ஊஞ்சல் வழிபாட்டில் நாம் என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.

Vastu Tips: வாழ்க்கையில் இந்த 5 பொருட்களை யாரிடமும் கடன் வாங்காதீர்கள்!

ஜோதிட சாஸ்திரப்படி, கடன் வாங்குவது வாழ்க்கையில் சிக்கல்களை ஏற்படுத்தும். சில பொருட்களை மற்றவர்களிடம் இருந்து கடன் வாங்கக் கூடாது என்பது ஐதீகமாக உள்ளது. இவற்றை கடன் வாங்குவது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் என நம்பப்படுகிறது. எனவே, தன்னிறைவுள்ள வாழ்க்கைக்கு கடன் வாங்காமல் இருப்பது நல்லது என சொல்லப்படுகிறது.

தூங்கி எழுந்ததும் இதெல்லாம் பார்க்காதீங்க.. அந்த நாளே விளங்காது!

காலை எழுந்தவுடன் படுக்கையில் நாம் செய்யும் சில விஷயங்கள் மன அழுத்தத்தையும், எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தும். பாசிட்டிவ் எண்ணங்களுடன் நாளைத் தொடங்க, இவற்றைத் தவிர்ப்பது அவசியம் என சொல்லப்பட்டுள்ளது. நேர்மறைச் சூழல், நிறைந்த பாத்திரங்கள், சுத்தமான வீடு ஆகியவை நல்ல நாளை உருவாக்கும் என நம்பப்படுகிறது.

Vastu Tips: வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க வாஸ்து டிப்ஸ் இதோ!

வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க, பிரதான நுழைவாயிலை சுத்தமாகவும், குப்பைகள் இல்லாமலும் வைக்க வேண்டும். தேவையற்ற பொருட்களை அகற்றி, வெளிர் வண்ணச் சுவர்கள், செடிகள், போதுமான வெளிச்சம் மற்றும் மகிழ்ச்சியான படங்கள் வைப்பது நல்லது என சொல்லப்படுகிறது. அதனைப் பற்றிக் காணலாம்.

Vastu Tips: ரக்‌ஷா பந்தன் பண்டிகை.. ராக்கி கட்டும்போது பின்பற்ற வேண்டிய வாஸ்து விதிகள்!

2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் பண்டிகையில், சகோதர சகோதரிகள் ராக்கி கட்டுவதற்கு சரியான நேரம் மற்றும் திசையைத் தேர்ந்தெடுப்பது முக்கியமானதாகும். வாஸ்து சாஸ்திரப்படி, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் அமர்ந்து ராக்கி கயிறு கட்ட வேண்டும்.