பிக்பாஸில் செலிபிரேஷன் வாரத்தில் வீட்டிற்குள் வந்த திவாகர் செய்த செயல் – வார்னிங் கொடுத்த பிக்பாஸ்
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்றுடன் 93 நாட்கள் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் தற்போது பணப்பெட்டி டாஸ்க் நடைப்பெற்று வருகின்றது. இதில் யார் பணப்பெட்டியை எடுப்பார்கள் என்று அனைவரும் காத்திருக்கும் நிலையில் முன்னாள் போட்டியாளர்களும் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துகொண்டு இருக்கின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் மக்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சி பிக்பாஸ் தமிழ். இந்த நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தமிழில் தொடங்கிய நிலையில் தற்போது 9-வது சீசன் நடைப்பெற்று வருகின்றது. அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு தொடங்கிய இந்த நிகழ்ச்சி தற்போது 93 நாட்களை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் தற்போது இறுதிப் போட்டியில் மொத்தம் 6 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் அரோரா டிக்கெட் டூ ஃபினாலே டிக்கெட்டை பெற்றதால் தொடர்ந்து அவர் இறுதி வரை இருப்பார். மற்றவர்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்து அடுத்து அடுத்து வெளியேற்றப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முன்னாள் போட்டியாளர்கள் ஒவ்வொருவராக பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பப்படுகின்றனர்.
அதன்படி நேற்று பிக்பாஸ் வீட்டில் முன்னதாக வெளியேறிய வியானா நேற்று பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்த நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிற்குள் வாட்டர்மெலன் திவாகர் மற்றும் பிரவீன் காந்தி ஆகியோர் நுழைந்துள்ளனர். தொடர்ந்து பணப்பெட்டி டாஸ்க் பிக்பாஸ் வீட்டில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் முன்னாள் போட்டியாளர்களும் தொடர்ந்து வீட்டிற்குள் வந்துகொண்டே இருக்கின்றனர்.




பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த திவாகருக்கு வார்னிங் கொடுத்த பிக்பாஸ்:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முன்னாள் போட்டியாளர்கள் வரும் போது வெளியுலக வாழ்க்கையில் நடைபெறும் விசயங்களை உள்ளே உள்ள போட்டியாளர்களிடம் சொல்லக் கூடாது. ஆனால் திவாகர் வெளியில் நடக்கும் விசயங்களை போட்டியாளர்களிடம் கூறுகிறார். இதனைத் தொடர்ந்து வார்னிங் கொடுத்த பிக்பாஸ் தொடர்ந்து இப்படி செய்தால் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவீர்கள் என்று தெரிவித்துள்ளார். இதற்கு மண்ணிப்பு கேட்டு பிக்பாஸ் வீட்டில் இருப்பதாக திவாகர் கூறியுள்ளார்.
Also Read… பாரதிராஜாவுக்கு என்ன பிரச்னை? உடல்நிலை எப்படி இருக்கு? மருத்துவனை வெளியிட்ட அறிக்கை
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day93 #Promo1 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/4KhYKBPTvD
— Vijay Television (@vijaytelevision) January 6, 2026
Also Read… பிக்பாஸில் விக்ரம் நல்லா கொளுத்தி போடுவார்… வியானா கருத்தால் கண்கலங்கிய விக்ரம்