Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிக்பாஸில் இந்த வாரம் பணப்பெட்டி வாரம்… அட அதில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா?

Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கு இன்றுடன் 92-வது நாளை எட்டியுள்ள நிலையில் இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற உள்ளது. இந்த டாஸ்கில் பணப்பெட்டியை எடுப்பவர்கள் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் இந்த வாரம் பணப்பெட்டி வாரம்… அட அதில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா?
பிக்பாஸ்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Jan 2026 10:40 AM IST

பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடர்ந்து அக்டோபர் மாதம் 05-ம் தேதி 2025-ம் ஆண்டு தொடங்கிய நிலையில் இன்றுடன் 92-வது நாளை எட்டியுள்ளது. கடந்த 13-வது வாரம் பிக்பாஸ் வீட்டில் பல நிகழ்வுகள் நடந்தது. அதன்படி டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்க் கடந்த வாரம் முழுவதும் நடைப்பெற்ற நிலையில் டாஸ்கின் போது சாண்ட்ராவிடம் அத்துமீறிய கம்ருதின் மற்றும் பார்வதி மீது பார்வையாளர்கள் கடும் கோபத்தில் இருந்தனர். இந்த நிலையில் வார இறுதியில் அவர்கள் இருவருக்கும் விஜய் சேதுபதி என்ன சொல்வார் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர் மக்கள். இந்த நிலையில் சனி கிழமை நிகழ்ச்சியில் வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பார்வதி மற்றும் கம்ருதின் செய்த செயலை கண்டித்ததுடன் அவர்களுக்கு ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றினார்.

பிக்பாஸ் தமிழ் வரலாற்றில் ஒரே நேரத்தில் இரண்டு நபர்களுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கடந்த 13-வது வார எவிக்‌ஷனின் சுபிக்‌ஷா வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது இறுதி வாரத்தில் 6 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். இதில் அரோரா டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கில் வெற்றிப் பெற்ற காரணத்தால் அவர் இறுதி வரை இருப்பார். இந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் மிட் வீக் எவிக்‌ஷன் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸில் பணப் பெட்டியை எடுக்கப் போவது யார்?

பிக்பாஸ் தமிழ் சீசன்களில் இதுவரை இல்லாத மாதிரி இந்த சீசனில் புதிய முறையில் பணப் பெட்டி டாஸ்க் வழங்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கிற்கு பணப்பெட்டி 2.o என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்தப் பெட்டியில் போட்டியாளர்களை பணத்தை சேகரிக்க வேண்டும். அதற்கு டாஸ்குகள் வழங்கப்படுகிறது. அவர்கள் எடுக்கும் பணம் போதும் என்று நினைத்தால் பெட்டியை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறலாம் என்பதே அந்த டாஸ்க். இதில் யார் பெட்டியைப் எடுப்பார்கள் என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

Also Read… விஜய் சார் திரைக்கதையில் ஒருபோதும் தலையிடுவதில்லை – ஏ.ஆர்.முருகதாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஜன நாயகன் படக்குழுவின் செல்லம் மமிதா பைஜூ – இயக்குநர் எச் வினோத்