இந்தியப் பெருங்கடல் பகுதிகளில், 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சுனாமி தயார்நிலையில் கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால், இந்தியப் பெருங்கடல் பகுதியில், அதிக எண்ணிக்கையிலான சுனாமி கிராமங்களை கொண்ட முதல் நாடாக இந்தியா உருவாகும். சுனாமி ரெடி என்பது, மக்களின் பங்கேற்புடன் செயல்படும் ஒரு தன்னார்வ அடிப்படையிலான சமூக திட்டமாகும்.