திருமணம் செய்வதாக ஏமாற்றி தவறாக நடந்துகொண்டார் – பிக்பாஸ் முத்துக்குமரன் மீது இன்ஸ்டா பிரபலம் பகீர் குற்றச்சாட்டு!
Bigg Boss Tamil Season 8 Winner Muthukumaran | சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்த முத்துக்குமரன் கடந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளரும் ஆவர். இவர் மீது இன்ஸ்டாகிராம் பிரபலம் அளித்த குற்றச்சாட்டு இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
தமிழ் சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், பிரபலங்களை பேட்டி எடுப்பதன் மூலமாகவும் மக்களிடையே அறிமுகம் ஆனவர் முத்துக்குமரன். இவரது பேட்டி வீடியோக்கள் பல ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார் முத்துக்குமரன். இவர் போட்டியில் விளையாடும் விதம் மற்றும் சக போட்டியளர்களிடையே பேசும் முறை என பல விசயங்களில் பார்வையாளர்களை கவர்ந்தார். அது மட்டும் இன்றி விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்று வெற்றி வாகையையும் சூடினார் முத்துக்குமரன். அதன்படி பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் வெற்றியாளராக முத்துக்குமரன் வலம் வரும் இவர் தொடர்ந்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது படங்களுக்கு விமர்சனம் கொடுப்பது என்று செய்து வருகிறார்.
அது மட்டும் இன்றி தமிழக அரசியலில் இருந்து அனைத்து விசயங்களிலும் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டு வருகிறார் முத்துக்குமரன். இந்த நிலையில் அவர் மீது இன்ஸ்டாகிராம் பிரபலம் வஹிதா அக்பர் ஒரு பரப்ரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார். அது மட்டும் இன்றி தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறிவிட்டு ஏமாற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.




பிக்பாஸ் முத்துக்குமரன் மீது இன்ஸ்டா பிரபலம் பகீர் குற்றச்சாட்டு:
அதன்படி இன்ஸ்டாகிரம் பிரபலம் வஹிதா அக்பர் வெளியிட்டுள்ள வீடியோவில் தான் காதலுக்காக ஏங்கிக் கொண்டிருந்த நேரத்தில் முத்துக்குமரனை சந்தித்ததாகவும் அவர் தன்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று மிகவும் பாசமாக நடந்துகொண்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தங்களுக்கு இடையே இணக்கம் அதிகரித்ததாகவும் முத்துக்குமரன் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி தற்போது ஏமாற்றிவிட்டதாகவும் வஹிதா அக்பர் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் தான் தற்கொலை செய்துகொள் போவதாக வஹிதா அக்பர் தெரிவித்த நிலையில் அது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
வஹிதா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு:
View this post on Instagram
இந்த நிலையில் தற்போது வஹிதா அக்பர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முத்துக்குமரன் உடன் இருக்கும் நெருக்கமான வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அதில் முத்துக்குமரன் வஹிதாவை தனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது என்று கூறியுள்ளார். இந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. மேலும் இந்த குற்றச்சாட்டுகள் குறித்து முத்துக்குமரன் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Bhaiyamma wahidha about sexual predator biggboss muthukumaran
#Justiceforwahidha #Muthukumaran https://t.co/DvXcZFQmSa— Madras (@theMadras10) October 7, 2026