AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஓம் படத்தின் சாட்டிலைட் – ஓடிடி உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனங்கள்? கவனத்தை ஈர்க்கும் தகவல்!

OM Movie satellite rights and OTT update | தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஓம். இந்தப் படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமைகளை எந்த நிறுவனம் பெற்றுள்ளது என்பது குறித்து தகவல்கள் வைரலாகி வருகின்றது.

ஓம் படத்தின் சாட்டிலைட் – ஓடிடி உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனங்கள்? கவனத்தை ஈர்க்கும் தகவல்!
ஓம் படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Oct 2026 13:41 PM IST

தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு தொடக்கத்தில் கர என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. ஆக்‌ஷன் ஹீய்ஸ்ட் பாணியில் உருவான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி உள்ள ஓம் தி சாப்டர் ஒன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் நடிகர் தனுஷ். மேலும் இந்த 2026-ம் ஆண்டு நடிகர் தனுஷின் நடிப்பில் இரண்டாவதாக இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன்படி முன்னதாக ஓம் படம் அக்டோபர் மாதம் 16-ம் தேதி 2026-ம் ஆண்டு வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டது. பிறகு ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படம் முந்தைய நாளான 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாவதால் படத்தின் ரிலீஸை படக்குழு ஒத்தி வைத்துள்ளது.

அதன்படி இந்தப் ஓம் படம் வருகின்ற 20-ம் தேதி நவம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தப் படத்தில் இருந்து அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. மேலும் ஓம் படத்தில் இருந்து இரண்டாவது சிங்கிள் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓம் படத்தின் சாட்டிலைட் – ஓடிடி உரிமையைப் பெற்ற பிரபல நிறுவனங்கள்:

இந்த ஓம் படத்தில் நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடிகர்கள் மம்முட்டி, சாய்பல்லவி, ஸ்ரீலீலா உட்பட நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையைப் பிரபல நிறுவனங்கள் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. அதன்படி ஓம் மூவி நிறுவனம் தனது சாட்டிலைட் உரிமைகளை சன் டிவிக்கும், டிஜிட்டல் உரிமைகளை நெட்ஃபிளிக்ஸுக்கும் ஒரு பெரும் தொகைக்கு விற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read… Vijay Sethupathi: பத்தா திரைப்படத்தின் வெற்றியால் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… யோகி பாபுவின் சிங்காரம் படத்தின் ரிலீஸ் அப்டேட் இதோ!

Follow Us