Lokesh Kanagaraj: பாலிவுட் செல்லும் லோகேஷ்.. அக்ஷய் குமாருடன் புது படத்தில் இணைகிறாரா?
Lokesh Kanagaraj Bollywood : தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குநர்களில் ஒருவராக இருந்துவருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் ஹீரோவாகவும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இவர் அல்லு அர்ஜூனுடன் படத்தில் பணியாற்றவுள்ள நிலையில், இதன் பிறகு பாலிவுட் சினிமாவில் நுழைவதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.
கடந்த 2017ம் ஆண்டில் தமிழில் வெளியான மாநகரம் (Maanagaram) என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக நுழைந்தவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்துவரும் நிலையில், பல்வேறு உச்ச நடிகர்களின் நடிப்பில் படங்களை இயக்கி சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்துள்ளார். இவரின் இயக்கத்தில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் கூலி. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth) நாயகனாக நடித்திருந்தார். இந்த படத்திற்கு பின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் (Arun Matheshwaran) இயக்கத்தில் டிசி (DC) என்ற படத்தின் மூலம் நயாகனாகவும் அறிமுகமானார்.
இதன் பிறகு தற்போது அல்லு அர்ஜுனின் (Allu Arjun) 23வது படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் பிசியாக உள்ள நிலையில், இவர் பாலிவுட் சினிமாவிலும் விரைவில் நுழைவார் என கூறப்படுகிறது. அந்த தகவல்கள் குறித்து விவரங்கள் இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு உங்களிடம் கதை இருக்கிறதா? அட்லீ சொன்ன விஷயம்!
அக்ஷய் குமாருடன் கைகோர்க்கும் லோகேஷ் கனகராஜ்:
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டிசி படத்தின் வெற்றியை தொடர்ந்து, அல்லு அர்ஜுனின் நடபைபிளும், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் AA23 படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் உள்ளார். இப்படத்தி ஷூட்டிங் 2026ம் ஆண்டு இறுதிக்குள் தொடங்கும் என கூறப்படுகிறது. அந்த விதத்தில் இவர் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரை வைத்து படம் ஒன்றை இயக்குவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்த போட்டியாளர்கள்.. முதல் நாளிலே ஜேசனுக்கு வைத்த ஆப்பு – புரோமோ இதோ!
ஆனால் மற்றொருபுறம் அக்ஷய் குமாரின் தயாரிப்பில் மற்ற நடிகரை வைத்து லோகேஷ் புதிய படத்தை இயக்க வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது. ஒருவேளை அக்ஷய் குமார் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி அமைந்தால் அது இரும்புக்கை மாயாவி படமாக இருக்க வாய்ப்புகள் அதிகமா என வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
லோகேஷ் கனகராஜ் மற்றும் அக்ஷய் குமார் கூட்டணி குறித்து இணையத்தில் பரவும் பதிவு:
Buzz — Lokesh Kanagaraj’s 8th Film Update 🎬
An unexpected combo is reportedly in the works 👀🔥
– #LokeshKanagaraj recently met #AkshayKumar for a Film, The project is still in the early stages, with producer #NazeerAhmed and writer #MageshBalasubramaniam also present.
– An official announcement is expected once things are finalized. For now, it remains unclear whether Lokesh will direct Akshay or Produce the project.
– It may be the #IrumbuKaiMaayavi story. Initially, the story was narrated to #Suriya, then Lokesh narrated it to #AamirKhan. But now, it may be done by Akshay Kumar. Let’s wait and see.
— Movie Tamil (@_MovieTamil) October 4, 2026
லோகேஷ் கனகராஜ் AA 23 படத்தின் பணிகளில் பிசியாக இருக்கிறார். இந்த படத்திற்கு பின் இவர் நடிகராக ஒரு படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் கார்த்தியின் கைதி 2 படத்தையும் இயக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் எது உண்மை என அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.