AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

நாளை வெளியாகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ட்ரெய்லர்!

Jailer 2 Movie Trailer Update | நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நாளை வெளியாகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ட்ரெய்லர்!
ஜெயிலர் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Oct 2026 11:57 AM IST

தமிழ் சினிமாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வருடத்திற்கு ஒரு படமாவது திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அப்படி திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் கூலி. இந்தப் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்தார் நடிகர் ரஜினிகாந்த். அப்படி அவர் நடித்துள்ள படம் ஜெயிலர் 2. முன்னதாக வெளியான இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில் தற்போது படப்பின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைப்பெற்று வருகின்றது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து நடிகர்கள் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, மிதுன் சக்ரபர்த்தி, ரம்யா கிருஷ்ணன், வித்யா பாலன், யோகி பாபு, வசந்த் ரவி, மிர்ணா என பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தில் பலர் கேமியோ வேடத்தில் நடித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

நாளை வெளியாகிறது ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 படத்தின் ட்ரெய்லர்:

இந்த நிலையில் ஜெயிலர் 2 படம் வருகின்ற 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது. அதன்படி படத்தின் ட்ரெய்லர் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜெயிலர் 2 படத்தின் ட்ரெய்லர் நாளை 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Also Read… சிக்மா படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா? வைரலாகும் தகவல்

ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இன்று பிக்பாஸிலிருந்து வெளியேறும் 2 பேர் யார்? வைரலாகும் புரோமோ வீடியோ

Follow Us