AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜெயிலர் 2 படத்தின் கதைச்சுருக்கம் இதுதானா? வைரலாகும் தகவல்

Jailer 2 movie synopsis | நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் கதைச் சுருக்கம் என்ன என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தற்போது தகவல் ஒன்று பரவி வருகின்றது.

ஜெயிலர் 2 படத்தின் கதைச்சுருக்கம் இதுதானா? வைரலாகும் தகவல்
ஜெயிலர் 2Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Oct 2026 12:41 PM IST

தமிழ் சினிமாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்தடுத்து வரிசையாக படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் படங்கள் உலக அளவில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சினிமாவில் பிசியான நாயகனாக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் ஒரு படத்தின் படப்பிடிப்பை முடித்த உடனேயே அடுத்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி தொடர்ந்து நடித்து வருகிறார். ஒரு பக்கம் படம் வெளியீட்டு பணிகள் பிசியாக நடைப்பெற்று வருவது போல அடுத்தப் படத்தில் அவர் பிசியாக நடித்து வருவதுதான் இளம் தலைமுறையினருக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். இந்த வயதிலும் எவ்வளவு சுறுசுறுப்பு என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் கதை சுருக்கம் என்ன என்பது குறித்து சினிமா வட்டாரங்களில் தகவல்கள் பரவி வருகின்றது.

ஜெயிலர் 2 படத்தின் கதைச்சுருக்கம் இதுதானா?

அதன்படி க்ரைம் உலகின் புதியதொரு அச்சுறுத்தல் ஓய்வுபெற்ற சிறை அதிகாரி ‘டைகர்’ முத்துவேல் பாண்டியனின் (சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்) அமைதியான வாழ்க்கையைச் சீர்குலைக்கிறது. இதனால், தனது குடும்பத்தையும் தனது பாரம்பரியத்தையும் காக்க அவர் மீண்டும் தனது கடுமையான மற்றும் அதிரடியான பாணிக்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதுவே ஜெயிலர் 2 படத்தின் கதைக்களமாகும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வைரலாகி வருகின்றது.

Also Read… Karthik Subbaraj: அது எனக்கு ஒரு பெரிய கனவு.. கார்த்திக் சுப்புராஜ் சொன்ன விஷயம்!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… ஃபகத் ஃபாசிலின் டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தை வெகுவாகப் பாராட்டிய மகேஷ் பாபு

Follow Us