AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“கல்லீரல் கிழிந்து பலி!”.. போலீசார் தாக்குதலில் வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்?.. ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு!

Sriperumbudur Shocking Incident: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலைப் பொருளைக் கேட்ட விவகாரத்தில், உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் காவல்துறை தாக்கியதில் கல்லீரல் கிழிந்து உயிரிழந்ததாகக் அதிர்ச்சிப் புகார் எழுந்துள்ளது. இச்சம்பவத்தின் பின்னணி, மனித உரிமை ஆர்வலர்களின் கோரிக்கைகள் மற்றும் காவல்துறை விசாரணை குறித்த முழு விவரங்கள் இதோ.

“கல்லீரல் கிழிந்து பலி!”.. போலீசார் தாக்குதலில் வடமாநில தொழிலாளிக்கு நேர்ந்த கொடூரம்?.. ஸ்ரீபெரும்புதூரில் பரபரப்பு!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 08 Oct 2026 11:51 AM IST

காஞ்சிபுரம், அக்.08: காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளில் பிகார், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கிப் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அருகே கடையில் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலைப் பொருளைக் கேட்டுத் தகராறில் ஈடுபட்ட உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த வடமாநிலத் தொழிலாளி ஒருவர், காவல் துறையினர் தாக்கியதில் கல்லீரல் கிழிந்து உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறை உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: மருத்துவர் வேடத்தில் கைவரிசை.. ஸ்டான்லி மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்.. விசாரணையில் வெளிவந்த ஷாக் தகவல்!

சம்பவம் நடந்தது எப்படி?:

உத்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தங்கிப் பணியாற்றி வந்துள்ளார். சம்பவத்தன்று அருகில் உள்ள கடை ஒன்றிற்குச் சென்ற அவர், அங்குத் தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் புகையிலைப் பொருளைக் கேட்டுப் பிரச்சனை செய்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரோந்துப் பணி காவல் துறையினர், தகராறில் ஈடுபட்ட அந்த நபரைப் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது காவல் துறையினருக்கும் அந்தத் தொழிலாளிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, காவல் துறையினர் அவரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது.

பிரேதப் பரிசோதனை விவரங்கள்:

காவல் துறையினரின் தாக்குதலுக்குள்ளான தொழிலாளிக்கு திடீரென கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவரது உடலைக் கைப்பற்றி நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில், அடிபட்டதன் காரணமாக அவரது கல்லீரல் கிழிந்து ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்திருக்கலாம் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. காவல் துறையினரின் மிதமிஞ்சிய தாக்குதலே இந்த உயிரிழப்பிற்கு காரணம் எனப் புகார் எழுந்துள்ளதால் இச்சம்பவம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

மேலும் படிக்க: 10 ஆண்டு திருமண வாழ்க்கை கசந்தது.. கணவனை தவிக்கவிட்டு கள்ளக்காதலனுடன் பெண் எஸ்கேப்.. வடபழனியில் அதிர்ச்சி சம்பவம்!

சட்ட ரீதியான நடவடிக்கைகள்:

இக்கடூர சம்பவத்தைத் தொடர்ந்து, மனித உரிமை ஆர்வலர்களும் வடமாநிலத் தொழிலாளர் சங்க பிரதிநிதிகளும் இச்சம்பவத்திற்கு நியாயமான விசாரணை கோரி குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர். காவலில் அல்லது காவல்துறை விசாரணையின் போது நிகழும் இதுபோன்ற சந்தேகத்திற்குரிய மரணங்கள் குறித்து நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் மீது உரிய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. மேலும், தமிழகத்தில் பணியாற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

Follow Us