AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பராமரிப்பு பணிகள்.. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து..

EMU Service Changes: சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.48 மற்றும் பிற்பகல் 12 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், கூடுவாஞ்சேரி–செங்கல்பட்டு இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகின்றன. பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் ஏற்படும் இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு, பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை அதற்கேற்ப அமைத்துக்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

பராமரிப்பு பணிகள்.. சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Oct 2026 09:30 AM IST

அக்டோபர் 8. 2026: சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை தினசரி ஏராளமான மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆயிரக்கணக்கான பயணிகள், குறிப்பாக வேலைக்குச் செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இந்த ரயில் சேவையை நம்பியுள்ளனர். இந்நிலையில், பராமரிப்பு பணிகள் காரணமாக அக்டோபர் 8-ம் தேதி சில மின்சார ரயில்கள் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சிங்கப்பெருமாள்கோவில் பணிமனையில் பராமரிப்பு பணிகள்:

எழும்பூர்–விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள சிங்கப்பெருமாள்கோவில் பணிமனையில் காலை 11.40 மணி முதல் பிற்பகல் 2.40 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரணமாக சென்னை கடற்கரை–செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: அரசு ஊழியர்களுக்கு செக்.. சொத்து விவரங்களை தாக்கல் செய்தால் மட்டுமே பதவி உயர்வு – தமிழக அரசு அதிரடி..

செங்கல்பட்டில் இருந்து புறப்படும் ரயில்கள் பகுதி நேரமாக ரத்து:

செங்கல்பட்டில் இருந்து காலை 11.50 மணி மற்றும் பிற்பகல் 2.35 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில்கள், செங்கல்பட்டு–காட்டாங்குளத்தூர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகின்றன.

மேலும், செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 12.30 மற்றும் 12.35 மணிக்கு புறப்படும் ரயில்கள், செங்கல்பட்டு–கூடுவாஞ்சேரி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகின்றன.

சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் ரயில்கள்:

சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.13, 11.28 மற்றும் பிற்பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள், காட்டாங்குளத்தூர்–செங்கல்பட்டு இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க: கட்டுப்பாட்டை இழந்து மோதிய கார்.. பற்றி எரிந்த பெட்ரோல் பங்க்.. ஓசூரில் நள்ளிரவில் பயங்கரம்!

அதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.48 மற்றும் பிற்பகல் 12 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள், கூடுவாஞ்சேரி–செங்கல்பட்டு இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகின்றன. பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவையில் ஏற்படும் இந்த மாற்றத்தை கருத்தில் கொண்டு, பயணிகள் தங்களது பயணத் திட்டங்களை அதற்கேற்ப அமைத்துக்கொள்ளுமாறு தெற்கு ரயில்வே அறிவுறுத்தியுள்ளது.

Follow Us