AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price: நகை பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. சென்னையில் 2-வது நாளாக மாற்றமின்றி நீடிக்கும் தங்கம் விலை..

Gold Rate: அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.1,09,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.14,956-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,648-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Gold Price: நகை பிரியர்களுக்கு ஹாப்பி நியூஸ்.. சென்னையில் 2-வது நாளாக மாற்றமின்றி நீடிக்கும் தங்கம் விலை..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Oct 2026 10:07 AM IST

அக்டோபர் 8, 2026: சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை இரண்டாவது நாளாக எந்தவித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலையில் கடந்த சில நாட்களாக பெரிய அளவில் மாற்றம் இல்லாதது வாடிக்கையாளர்கள் மத்தியில் சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் மாதம் தொடங்கியதில் இருந்து தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக அக்டோபர் 1-ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது. அதன்பிறகு பெரிய அளவில் மாற்றம் ஏற்படாமல் தொடர்ந்து நிலையாக உள்ளது. வெள்ளி விலையும் கடந்த ஒரு வாரமாக பெரிய மாற்றமின்றி நீடித்து வருகிறது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்:

அக்டோபர் 8-ம் தேதி சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,710-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.1,09,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.14,956-க்கும், ஒரு சவரன் ரூ.1,19,648-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க: ATM-ல் பணம் கைக்கு வராமலே கணக்கில் டெபிட் ஆகிவிட்டதா?.. RBI-ன் இந்த விதிகளை தெரிந்துக்கொள்ளுங்கள்!

தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

2026-ம் ஆண்டு தொடக்கத்தில் தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில், ஜூன் மாதம் முதல் கடுமையான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இதனால் தங்கத்தில் முதலீடு செய்யலாமா என்ற குழப்பம் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சாய்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் காவேரி மோர் கூறுகையில், தங்கம் தற்போது விலை திருத்தத்தில் இருப்பதாகவும், விலை மேலும் குறையுமா அல்லது உயருமா என குழப்பமடையாமல், கையில் உள்ள பணத்தை படிப்படியாக தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: தங்கத்தில் முதலீடு செய்யாலாமா,வேண்டாமா?.. குழப்பத்தில் இருக்கு மக்கள்.. முக்கிய நிபுணர் கூறுவது இதுதான்!

விலை உயர வாய்ப்பு:

உலக பொருளாதாரத்தில் நிலவும் சீரற்ற நிலை, மத்திய கிழக்கில் நீடிக்கும் போர் பதற்றம், வட்டி விகிதம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சூழலில், 2026-ம் ஆண்டு இறுதிக்குள் அல்லது 2027-ம் ஆண்டு தொடக்கத்தில் தங்கத்தின் விலை மேலும் கணிசமாக உயரக்கூடும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

Follow Us