AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கட்டுப்பாட்டை இழந்து மோதிய கார்.. பற்றி எரிந்த பெட்ரோல் பங்க்.. ஓசூரில் நள்ளிரவில் பயங்கரம்!

Hosur Horrific Accident: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நள்ளிரவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பெட்ரோல் பங்க் மீது மோதியதில் பயங்கரத் தீ விபத்து ஏற்பட்டது. காரில் பற்றி எரிந்த தீ பெட்ரோல் பங்கிற்கும் பரவியதில் கார் முற்றிலும் கருகிய நிகழ்வு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கட்டுப்பாட்டை இழந்து மோதிய கார்.. பற்றி எரிந்த பெட்ரோல் பங்க்.. ஓசூரில் நள்ளிரவில் பயங்கரம்!
தீ விபத்து
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 08 Oct 2026 08:09 AM IST

கிருஷ்ணகிரி, அக்.08: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் நள்ளிரவில் திடுக்கிட வைக்கும் பெரும் விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் இருந்த பெட்ரோல் பங்க் இயந்திரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் கார் உடனே தீப்பற்றி எரியத் தொடங்கிய நிலையில், அந்தத் தீ பெட்ரோல் பங்க் வளாகத்திற்கும் வேகமாகப் பரவியது. நள்ளிரவு நேரத்தில் நடந்த இந்த கோரச் சம்பவம் அப்பகுதி மக்களையும், அங்குப் பணியாற்றிய ஊழியர்களையும் பெரும் அதிர்ச்சிக்கும் பீதிக்கும் உள்ளாக்கியது.

இதையும் படிக்க: வண்டலூர் பூங்கா செல்ல பிளான் இருக்கா? 20 நாட்களுக்கு சபாரி சேவை நிறுத்தம்.. காரணம் என்ன?

கட்டுப்பாட்டை இழந்து மோதிய கார்:

ஓசூர் முக்கியச் சாலையில் நள்ளிரவு நேரத்தில் கார் ஒன்று மிக அதிவேகமாக வந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த பெட்ரோல் பங்கிற்குள் பாய்ந்து, எரிபொருள் நிரப்பும் இயந்திரத்தின் மீது பலமாக மோதியது. மோதிய மறுக்கணமே காரின் முன்பகுதியில் இருந்து தீப்பொறி பறந்து, நொடிப் பொழுதில் கார் முழுவதும் தீப்பற்றி எரியத் தொடங்கியது.

பற்றி எரிந்த பெட்ரோல் பங்க்:

காரில் பற்றி எரிந்த தீ, பெட்ரோல் பங்க் இயந்திரங்களுக்கும் பரவியதால் அப் பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து விபத்து களமானது பதற்றமாக மாறியது. பெட்ரோல் பங்க் ஊழியர்கள் உடனடியாகத் தீயணைப்புத் துறைக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பெட்ரோல் பங்க் முழுமையாகத் தீக்கிரையாவதைத் தடுக்கும் வகையில் தீவிரமாகப் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்:

விபத்து நடந்த நொடியில் பெட்ரோல் பங்க்கில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி (CCTV) கேமராக்களில் பதிவானக் காட்சிகள் காவல்துறையினரால் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பெட்ரோல் பங்க் ஊழியர்களின் சமயோசிதமான செயல்பாடால், பிரதான எரிபொருள் சேமிப்பு நிலத்தடி தொட்டிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதால், மிக பெரிய அளவிலான ஆபத்தும் உயிர்ச்சேதமும் தவிர்க்கப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் பெட்ரோல் பங்குகளில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் இரவு நேர அதிவேகப் பயணங்கள் குறித்த விழிப்புணர்வின் அவசியத்தை இச்சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.

இதையும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தில் விதிமுறைகள் தளர்வு – வெளிமாநிலத்தில் வசிக்கும் தமிழ்நாட்டு பெண்களின் குழந்தைகளுக்கும் பயன்..

காவல்துறை விசாரணை:

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள ஓசூர் காவல்துறையினர், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காரை ஓட்டி வந்தவர் யார், அவர் மது போதையில் காரை இயக்கி விபத்தை ஏற்படுத்தினாரா அல்லது அதிவேகம் மற்றும் தூக்கக் கலக்கத்தினால் இந்த விபத்து நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த விபத்து ஓசூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us