AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வண்டலூர் பூங்கா செல்ல பிளான் இருக்கா? 20 நாட்களுக்கு சபாரி சேவை நிறுத்தம்.. காரணம் என்ன?

Vandalur Zoo Safari Closed: சிங்கங்கள் மற்றும் மான்கள் உலாவும் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், சிங்கம் மற்றும் மான்களை பார்வையிடும் சபாரி சேவை அக்டோபர் 14ஆம் தேதி முதல் 20 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

வண்டலூர் பூங்கா செல்ல பிளான் இருக்கா? 20 நாட்களுக்கு சபாரி சேவை நிறுத்தம்.. காரணம் என்ன?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 07 Oct 2026 19:52 PM IST

அக்டோபர் 7, 2026: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சிங்கம் மற்றும் மான்களை பார்வையிடும் சபாரி சேவை அக்டோபர் 14ஆம் தேதி முதல் 20 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. சிங்கங்கள் மற்றும் மான்கள் உலாவும் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2,500-க்கும் மேற்பட்ட விலங்குகள் பராமரிப்பு:

தமிழ்நாடு அரசின் வனத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் பழமையான உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகும். சுமார் 180 வகைகளைச் சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட விலங்குகள் இங்கு நவீன வசதிகளுடன் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் படிக்க: சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை வழக்கு: கையில் வாக் ஸ்டிக்குடன் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜரான ஜெம் வீரமணி..

சிங்கம், புலி, சிறுத்தை, யானை, காட்டெருமை, மான் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகளுடன் ஏராளமான பறவைகளும் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பூங்காவிற்கு வருகை தரும் நிலையில், விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் வந்து விலங்குகள் மற்றும் பறவைகளை பார்வையிட்டு செல்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகளுக்கு பல்வேறு வசதிகள்:

பூங்காவிற்கு வரும் பார்வையாளர்களுக்காக சபாரி மட்டுமின்றி, சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக முதியவர்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் வருபவர்கள் பூங்காவின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று விலங்குகளை பார்வையிட சபாரி சேவை பயனுள்ளதாக இருந்து வருகிறது.

மேலும் படிக்க: செங்கல்பட்டில் 14-வது டிஎஸ்பி பயிற்சி நிறைவு விழா: சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு பதக்கம் அணிவித்த முதல்வர் விஜய்..

மேலும், பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கு தனித்தனியாக நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. டிஜிட்டல் கேமரா உள்ளிட்ட கேமராக்களை பூங்காவிற்குள் கொண்டு செல்வதற்கும் தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

20 நாட்களுக்கு சபாரி சேவை நிறுத்தம்:

இந்நிலையில், சிங்கங்கள் மற்றும் மான்கள் உலாவும் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், சிங்கம் மற்றும் மான்களை பார்வையிடும் சபாரி சேவை அக்டோபர் 14ஆம் தேதி முதல் 20 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததும் சபாரி சேவை மீண்டும் தொடங்கப்படும் என்றும், சேவை தொடங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாரி சேவை மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதால், சுற்றுலாப் பயணிகள் வழக்கம்போல் வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு சென்று அங்குள்ள பிற விலங்குகள் மற்றும் பறவைகளை பார்வையிடலாம் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Follow Us