AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தலைவர் வந்ததும் கொண்டாட்டம் தொடங்குகிறது… ஜெயிலர் 2 படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையைப் பெற்றது ரெட் ஜெயண்ட் மூவிஸ்

Jailer 2 Movie Theatre Release Rights | நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் திரையரங்குகளில் தற்போது வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் தமிழ் நாட்டு ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

தலைவர் வந்ததும் கொண்டாட்டம் தொடங்குகிறது… ஜெயிலர் 2 படத்தின் தமிழ்நாடு ரிலீஸ் உரிமையைப் பெற்றது ரெட் ஜெயண்ட் மூவிஸ்
ஜெயிலர் 2 Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 08 Oct 2026 11:28 AM IST

தமிழ் சினிமாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு இந்தப் படத்தின் முதல் பாகமான ஜெயிலர் திரையரங்குகளில் வெளியானது. ரிட்டையட் ஜெயிலர் முத்துவேல் பாண்டியன் தனது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரன் உடன் இணைந்து வாழ்ந்து வருகிறார். ஜெயிலராக இருக்கும் போது பல சம்பவங்கள் செய்த இவர் ரிட்டையட் ஆன பிறகு மிகவும் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்கும் சூழலில் முத்துவேல் பாண்டியனின் மகன் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் பாண்டியன் கொலை செய்யப்பட்டதாக செய்தி வருகிறது. தனது மகனின் கொலைக்கு பழிவாங்க நினைக்கும் முத்துவேல் பாண்டியன் பல திடுக்கிடும் விசயங்களை தெரிந்துகொள்கிறார்.

அதுமட்டும் இன்றி தனது மகன் உயிருடன் இருப்பதையும் தெரிந்துகொள்கிறார். இப்படி இருக்கும் சூழலில் அந்த சூழ்ச்சியில் தனது மகனும் ஒரு பங்கு என்பதை அறிந்துகொள்ளும் முத்துவேல் பாண்டியன் மகனை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து செல்கிறார். அங்கு துப்பாக்கி சுடப்படும் சத்தம் மட்டும் க்ளைமேக்ஸ் காட்சியில் கேட்கப்பட்டது. இதில் முத்துவேல் பாண்டியன் தனது மகனை சுட்டாரா இல்லையா என்பதே இரண்டாம் பாகத்திற்கான நாட்.

ஜெயிலர் 2 தமிழ்நாடு ரிலீஸ் உரிமையைப் பெற்றது ரெட் ஜெயண்ட் மூவிஸ்:

இந்த நிலையில் தற்போது ஜெயிலர் 2 படத்தில் பல புதிய கதாபபத்திரங்கள் இணைந்துள்ளனர். மேலும் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது. மேலும் இந்தப் படம் வருகின்ற 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் ஜெயிலர் 2 படத்தின் தமிழ் நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையைப் பிரபல தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read… தனது 22-வது படத்தை தானே தயாரித்து நடிக்கும் நடிகர் சிபி சத்யராஜ் – வெளியானது அப்டேட்

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… நம் நேரத்தை வீணடிக்க வேண்டாம்… நெகட்டிவ் விமர்சனங்கள் குறித்து வெளிப்படையாக பேசிய நடிகர் சிவகார்த்திகேயன்!

Follow Us