AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஓர் அற்புதமான சிறுகதையைச் சினிமாவாகப் பார்த்த அனுபவம்… பத்தா படத்தைப் வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் ராஜூ முருகன்

Director Raju Murugan praised Baththa movie | நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் பத்தா. இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் ராஜூ முருகன் வெகுவாகப் பாராட்டி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஓர் அற்புதமான சிறுகதையைச் சினிமாவாகப் பார்த்த அனுபவம்… பத்தா படத்தைப் வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் ராஜூ முருகன்
பத்தா படம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 06 Oct 2026 13:02 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராஜூ முருகன். இவர் தமிழ் சினிமாவில் குக்கூ என்ற படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் ராஜூ முருகன் எழுதி இயக்கிய படங்கள் ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து திரைத்துறையில் படங்களை இயக்குவது மட்டும் இன்றி திரைக்கதை ஆசிரியராகவும் வலம் வருகிறார் இயக்குநர் ராஜூ முருகன். இவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் மை லார்ட். நடிகர் சசிக்குமார் நாயகனாக நடித்த இந்தப் படத்தில் நடிகை சைத்ரா ஆச்சார் நாயகியாக நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன் அடுத்ததாக எந்த நடிகரை வைத்து படம் இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில் இயக்குநர் ராஜூ முருகன் சமீபத்தில் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் விஜய் சேதுபதியின் பத்தா படத்தை வெகுவாகப் பாராட்டி பதிவிட்டுள்ளார்.

பத்தா படத்தைப் வெகுவாகப் பாராட்டிய இயக்குநர் ராஜூ முருகன்:

அதன்படி இயக்குநர் ராஜூ முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியதாவது, பத்தா பிரமாதமான எழுத்து. சிரிப்பும் விசும்பலுமாய் ஓர் அற்புதமான சிறுகதையைச் சினிமாவாகப் பார்த்த அனுபவம். எழுத்திலும் உருவாக்கத்திலும் தரமான வேலையைச் செய்திருக்கும் நண்பர் பாலாஜி தரணிதரனுக்கும், தயாரிப்பாளர் அட்லீக்கும், நடிப்பில் அள்ளும் அந்தச் சிறுவன் சாய்க்கும், விஜய் சேதுபதி, லிஜோ மோல், ஒளிப்பதிவாளர் நண்பர் செல்வகுமார், இசையமைப்பாளர் சாய், எழுத்தாளர் கரண் கார்க்கி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார்.

Also Read… இதுக்கா சண்ட.. பிக் பாஸில் ஜேசன் மற்றும் டிடிஎப் வாசனுக்கும் இடையே மோதல் – வைரலாகும் புரோமோ!

இயக்குநர் ராஜூ முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… உறுதியானது சூர்யா – எச்.வினோத் கூட்டணி? கவனத்தை ஈர்க்கும் தகவல்

Follow Us