AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிரபல நாயகனுடன் கூட்டணி வைக்கும் இயக்குநர் ராஜூ முருகன்? வைரலாகும் தகவல்

Director Raju Murugan Next Movie Update | தமிழ் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராஜூ முருகன். இவர் அடுத்ததாக எந்த நடிகரை வைத்து படம் இயக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரபல நாயகனுடன் கூட்டணி வைக்கும் இயக்குநர் ராஜூ முருகன்? வைரலாகும் தகவல்
இயக்குநர் ராஜூ முருகன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 04 Oct 2026 17:50 PM IST

தமிழ் சினிமாவில் தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் ராஜு முருகன். இவர் இயக்கும் படங்கள் அனைத்தும் அவர் சந்தித்த மனிதர்களிடம் இருந்து தெரிந்துகொண்ட விசயங்களை வைத்தே உருவாகி இருக்கும். தொடர்ந்து மக்களின் வாழ்வியலை மையமாக வைத்து படங்களை இயக்கும் ராஜு முருகன் கடந்த 2014-ம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளியான குக்கூ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூலிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் இயக்குநர் ராஜூ முருகன் அடுத்தடுத்து ஜோக்கர், ஜிப்சி, ஜப்பான் மற்றும் மை லார்ட் ஆகியப் படங்களை எழுதி இயக்கி உள்ளார். இதில் ஜப்பான் படத்தை தவிற மற்றப் படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன்படி இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது மை லார்ட் படம். நடிகர் சசிகுமார் நாயகனாக நடித்த இந்தப் படம் தான் இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியான இறுதிப் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக அதிக அளவில் பாராட்டைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன் அடுத்ததாக எந்தப் படத்தை இயக்க உள்ளார் என்பது குறித்து தகவல்கள் சினிமா வட்டாரங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

பிரபல நாயகனுடன் கூட்டணி வைக்கும் இயக்குநர் ராஜூ முருகன்?

இயக்குநர் ராஜு முருகன் தனது அடுத்த படத்திற்காக ஆர்யாவுடன் இணையவுள்ளார். இப்படத்தை ‘Y NOT ஸ்டுடியோஸ்’ (Y NOT Studios) நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ராஜு முருகனின் தனித்துவமான திரைப்பட உருவாக்கும் பாணியும், ஆர்யாவின் திரையில் மிளிரும் ஆளுமையும் இணைந்துள்ளது, நிச்சயமாகக் கவனிக்கத்தக்க ஒரு எதிர்பாராத கூட்டணியாக அமையும் என்று சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றது.

Also Read… Rashmika Mannndana: அவர் எதையும் கொண்டாடுவதில்லை.. கணவர் விஜய் தேவரகொண்டா குறித்து வெளிப்படையாக சொன்ன ராஷ்மிகா மந்தனா!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… மறைந்த லெஜண்ட்ரி இயக்குநர்.. சிங்கீதம் ஸ்ரீனிவாசா ராவ் தமிழில் இத்தனை படங்கள் இயக்கியுள்ளாரா? லிஸ்ட்!

Follow Us