மறைந்த லெஜண்ட்ரி இயக்குநர்.. சிங்கீதம் ஸ்ரீனிவாசா ராவ் தமிழில் இத்தனை படங்கள் இயக்கியுள்ளாரா? லிஸ்ட்!
Singeetham Srinivasa Rao has passed away | இந்திய சினிமாவின் பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாசா ராவ் தனது 94 வயதில் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் ரசிகர்கள் மற்றும் உறவினர்கள் தங்களது இரங்கல் பதிவை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு சினிமாவில் கடந்த 1972-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் நீதி நிஜய்தி. இந்தப் படத்தின் மூலமாக சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆனார் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ். இந்தப் படத்தை தொடர்ந்து தமிழ் சினிமாவில் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான திக்கற்ற பார்வதி என்ற படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகம் ஆனார். இவர் இயக்குநராக அறிமுகம் ஆன முதல் படங்களே தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் மட்டும் இல்லாமல் தொடர்ந்து ஆங்கிலத்திலும் படங்களை இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது இயக்கத்தில் வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமீபத்தில் சிங்கீதம் ஸ்ரீனிவாசா ராவ் எழுதி இயக்கி திரையரங்குகளில் வெளியான படம் சிங்கீதம். இந்தப் படம் தெலுங்கு மொழியில் உருவாகி இருந்தாலும் பான் இந்திய மொழிகளில் கடந்த 12-ம் தேதி ஜூன் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலக பிரபலங்களும் கொண்டாடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவில் சிங்கீதம் ஸ்ரீனிவாசா ராவ் இயக்கிய படங்கள்:
திக்கற்ற பார்வதி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாசா ராவ் அறிமுகம் ஆகி இருந்தாலும் அவரது இயக்கத்தில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து ராஜ பார்வை, அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், சின்ன வாத்தியார், காதலா காதலா, லிட்டில் ஜான், மும்பை எக்ஸ்ப்ரஸ் ஆகிய சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் தமிழ் சினிமாவில் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.




Also Read… பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ல் வைல்கார்ட் போட்டியாளர்கள் யார் தெரியுமா? வைரலாகும் தகவல்
பழம்பெரும் இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாச ராவ் காலமானார்:
இந்திய சினிமாவில் பழம்பெரும் இயக்குநராக திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் போற்றும் நபராக இருந்த இயக்குநர் சிங்கீதம் ஸ்ரீனிவாசா ராவ் நேற்று நள்ளிரவு வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். இவரது மறைவு திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் குடும்பத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் சமூக வலைதளங்களிலும் நேரிலும் சென்று தங்களது இரங்கள்களை பதிவு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read… கேரளாவில் சூர்யாவின் சீன் படத்தின் ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம் – வைரலாகும் அப்டேட்