இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் 2 படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் அப்டேட்
Jailer 2 Movie Censor And Runtime Update | தமிழ் சினிமாவில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் அப்டேட் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஜெயிலர் 2. இந்தப் படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் இரண்டாம் பாகத்தின் மீது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் உட்பட புதிதாக பல நடிகர்கள் இரண்டாம் பாகத்தில் இணைந்துள்ளனர். மேலும் இந்த ஜெயிலர் 2 படத்தினை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ளார். முதல் பாகத்தின் முடிவிலேயே இயக்குநர் நெல்சன் திலீக் குமார் இரண்டாம் பாகத்திற்கான தொடர்ச்சியை இயக்குநர் வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியான போது ஜெயிலர் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து உள்ளது.
அதன்படி ஜெயிலர் 2 படம் வருகின்ற 15-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தொடர்ந்து படம் தொடர்பான அப்டேட்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே அதிக அளவில் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இந்த நிலையில் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தொடர்பான அப்டேட்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.




இணையத்தில் வைரலாகும் ஜெயிலர் 2 படத்தின் சென்சார், ரன்னிங் டைம்:
அதன்படி நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் நெல்சன் திலீப் குமார் எழுதி இயக்கி உள்ள இந்த ஜெயிலர் 2 படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழை வழங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் இந்தப் படம் 2.45 நிமிடங்கள் கால அளவை கொண்டுள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#Jailer2 certified U/A
Runtime – 2hrs 45 minutes 18 seconds
(165 mins 18 sec)All set for a GRAND OPENING with all ages allowed families and audiences are all set to embrace the film all over India
SKY IS THE LIMIT AT THE BOX OFFICE 🔥🔥🔥
#Thalaivar #SuperstarRajinikanth sambavam 💯 guaranteed
— Movies Singapore (@MoviesSingapore) October 6, 2026
Also Read… பிக்பாஸில் டாஸ்கின் போது வாக்குவாதத்தில் ஈடுபடும் ஜேசன் – அவினாஷ்… வைரலாகும் வீடியோ!