AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Jailer 2: ஜெயிலர் 2 படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் அப்டேட்.. விவரங்கள் இதோ!

Jailer 2 Censor & Runtime Update: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் தமிழில் வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படம்தான் ஜெயிலர் 2. இப்படத்தின் ரிலீஸ் கிட்ட நெருங்கும் நிலையில், இப்படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Jailer 2: ஜெயிலர் 2 படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் அப்டேட்.. விவரங்கள் இதோ!
ஜெயிலர் 2 Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Oct 2026 20:20 PM IST

பான் இந்திய மொழி பிரபலங்கள் மத்தியில் பேமஸான நாயகனாக இருந்துவருபவர்தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் இதுவரை கிட்டத்தட்ட 171வது திரைப்படங்கள் வெளியாகியுள்ளது. இவரின் நடிப்பில் தற்போது 172வது திரைப்படமாக உருவாகியுள்ளதுதான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்கியுள்ள நிலையில், சன் பிக்ச்சர்ஸ் மிக பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளது. இந்த படமானது கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்ற வேடத்தில் நடித்துள்ள நிலையில், அவருடன் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் பல்வேறு பிரபலங்களும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது. அந்த விதத்தில் இப்படத்தின் சென்சார் அப்டேட் மற்றும் ரன்னிங் டைம் குறித்து இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சூர்யாவின் சீன் படத்தில் நஸ்லேனின் கேரக்டர் இதுவா? வைரலாகும் தகவல்

ஜெயிலர் 2 படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் விவரம்;

இந்த ஜெயிலர் 2 படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள நிலையில், இவரின் இயக்கத்தில் 5வது உருவாகியுள்ள படமாக இது அமைந்துள்ளது. இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க, இதை இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இவர்களின் இசையில் இப்படத்தின் பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது.

இதையும் படிங்க: ஜஸ்ட் ஃபார் லவ்.. மிஸ்ட்ரி பேண்ட்ஸி கதையில் உருவான ட்ரோன்ஸ் பட ட்ரெய்லர் வெளியீடு!

இந்த படத்திற்கு யு/ஏ +16 தரச் சான்றிதழ் கிடைத்துள்ளது. மேலும் இந்த படமானது 2 மணி நேரமும் 45 நிமிடங்களுமாக உருவாக்கப்பட்டுள்ளதாம். இப்படத்திற்கு யு/ ஏ +16 சென்சார் கிடைத்துள்ள நிலையில், 16 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே திரையரங்குகள் சென்று பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயிலர் 2 திரைப்படத்தின் ரன்னிங் டைம் மற்றும் சென்சார் அப்டேட் குறித்து இணையத்தில் வைரலாகும் பதிவு:

ஜெயிலர் 2 படமானது பான் இந்திய மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பான் இந்திய நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.  இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் விஜய் சேதுபதி போன்ற நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்த படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. மேலும் விரைவில் இப்படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us