AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

லோகேஷ் கனகராஜுடன் ஹீரோவாக அறிமுகமாகும் அனிருத்? அட இயக்குநர் இவரா?

Lokesh Kanagaraj & Anirudh: தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்போது இவர் ஹீரோவாகவும் படங்களில் நடித்துவருகிறார். அந்த விதத்தில் இவர் பிரபல இயக்குநருடன் ஹீரோவாக படத்தில், நடிக்கவுள்ளாராம், இதில் அனிருத்தும் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜுடன் ஹீரோவாக அறிமுகமாகும் அனிருத்? அட இயக்குநர் இவரா?
லோகேஷ் கனகராஜ் மற்றும் அனிருத்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 06 Oct 2026 16:58 PM IST

கோலிவுட் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருந்துவருபவர் லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj). இவரின் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புதிய படங்கள் உருவாக்கப்பட்டுவருகிறது. இயக்குநராக பணியாற்றிவரும் இவர் தற்போது ஹீரோவாகவும் படங்களில் நடித்துவருகிறார். இயக்குநர் அருண் மாதேஸ்வரன் (Arun Matheswaran) இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடித்த புதிய திரைப்படம்தான் டிசி (DC). இந்த படமானது கடந்த 2026ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியானது. இப்படத்திற்கு பிறகு இவர் அல்லு அர்ஜுனின் AA23 திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகளில் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் இவர் ஹீரோவாக புதிய படங்களில் நடிக்கவுள்ளாராம்.

இந்த படத்தில் லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக நடிக்க, அவருடன் இசையமைப்பாளர் அனிருத் நடிக்கவுள்ளாராம். இவர் இதுவரை எந்த படங்களிலும் நடிகராக நடிக்காத நிலையில், லோகேஷின் படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமாகவுள்ளாராம்.

இதையும் படிங்க: சிரஞ்சீவியின் படத்தின் இணைந்த அனுராக் காஷ்யப் – வெளியானது அப்டேட்

லோகேஷ் மற்றும் அனிருத்தின் படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்:

அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவருமே படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்களாம். இந்த படத்தை ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பரீவ் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் ஏற்கனவே கமல்ஹாசனுடன் புதிய படத்தில் இணைவதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது கமல்ஹாசன் இயக்குநர் எஸ்.யு. அருண்குமாருடன் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

இதையும் படிங்க: தள்ளிப்போகிறதா விஜய் ஆண்டனியின் அப்பா குட்டி படத்தின் ரிலீஸ்? வைரலாகும் தகவல்

இதன் காரணமாக அன்பரீவ் மாஸ்டர்ஸ் அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இது குறித்து லோகேஷ் மற்றும் அனிருத் இருவரும் எந்தவித அப்டேட்டையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அனிருத் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணி படம் பற்றி வைரலாகிவரும் பதிவு:

அனிருத் தமிழ் சினிமாவில் பிரபலமான இசையமைப்பாளர்களில் ஒருவராக இருந்துவருகிறார். இவரின் இசையமைப்பில் தமிழ் சினிமாவில் பல்வேறு நட்சத்திர நடிகர்களின் படங்கள் உருவாகியுள்ளது. அந்த விதத்தில் அனிருத் ஹீரோவாக படத்தில் நடிக்கவுள்ளாராம். இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஒருவேளை உண்மையானால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us