சிரஞ்சீவியின் படத்தின் இணைந்த அனுராக் காஷ்யப் – வெளியானது அப்டேட்
Anurag Kashyap joins Chiranjeevis Kaaka | பாலிவுட் சினிமாவில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் நடிகராக வலம் வருபவர் அனுராக் காஷ்யப். இவர் தற்போது சிரஞ்சீவியின் காகா படத்தில் இணைந்துள்ளதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
இந்தி சினிமாவில் திரைக்கதை ஆசிரியராக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் அனுராக் காஷ்யப். 1997-ம் ஆண்டே தனது சினிமா பயணத்தை தொடங்கிய அனுராக் காஷ்யப் கடந்த 2003-ம் ஆண்டு தான் இயக்குநராக அறிமுகம் ஆனார். பாஞ்ச் என்ற க்ரைம் த்ரில்லர் படத்தை இயக்கி இருந்தார் அனுராக் காஷ்யப். அந்தப் படத்தை தொடர்ந்து இந்தி சினிமாவில் அடுத்தடுத்து பல ஹிட் படங்களை இயக்கினார் இயக்குநர் அனுராக் காஷ்யப். இவரது இயக்கத்தில் இந்தி சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து பான் இந்திய மொழிகளில் உள்ள ரசிகர்களிடையேயும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இயக்குநராக வலம் வந்த அனுராக் காஷ்யப் தற்போது படங்களில் அதிக அளவில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி முன்னதாக இந்தி சினிமாவில் அதிக அளவில் நடித்து வந்த நடிகர் அனுராக் காஷ்யப் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் நடிகர் சிரஞ்சீவி படத்தில் நடிகர் அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.




சிரஞ்சீவியின் படத்தின் இணைந்த அனுராக் காஷ்யப்:
அதன்படி நடிகர் சிரஞ்சீவி தற்போது இயக்குநர் பாபி இயக்கத்தில் உருவாகி வரும் படம் காகா. இந்தப் படத்தின் அறிவிப்பு முன்னதாக வெளியான போதே படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது. மேலும் இந்தப் படத்தில் நடிகர் அனுராக் காஷ்யப் இணைந்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து இயக்குநர் பாபி வெளியிட்ட பதிவு சில கதாபாத்திரங்கள் அழியாத தாக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே உருவாக்கப்படுகின்றன. ‘காக்கா’ (Kaaka) திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ஆற்றல்மிக்க கலைஞரான அனுராக் காஷ்யப் அவர்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். விறுவிறுப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இப்படத்திற்கு, அவரது பங்களிப்பு கூடுதல் தீவிரத்தையும் சிறப்பையும் சேர்க்கும் என்பது உறுதி.
இயக்குநர் பாபி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:
Some characters are meant to leave a lasting impact. 🔥
Delighted to welcome the POWERHOUSE @anuragkashyap72 garu on board #Kaaka for a pivotal role.
His presence is sure to add another intense layer to this high-voltage entertainer. 🙌
Worldwide Grand Release on January 13th, 2027❤️🔥
Produced by @TheKVNofficial @KvnProductions
Megastar @KChiruTweets
#AnaswaraRajan @Nivetha_Tweets @MusicThaman @vijaykartikdop @AntonyLRuben @artkolla @saranyapotla @konavenkat99 @Chakrif1 @vforvineeth @UrsVamsiShekar @HaashtagMedia @KaakaMovie @zeemusicsouth #KAAKAOnJan13— Bobby (@dirbobby) October 5, 2026
Also Read… தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!