தென்னிந்தியத் படங்களைப் பார்க்கும்போது தன்னம்பிக்கை ஏற்படுகிறது – இயக்குநர் அனுராக் காஷ்யப்!
Director Anurag Kashyap talks about Sounth Indian movie | பாலிவுட் சினிமாவில் பிரபல இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். இவர் சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய போது தென்னிந்திய சினிமா குறித்து பேசியது இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தி மொழியில் இயக்குநராக அறிமுகம் ஆகி தற்போது பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருகிறார் அனுராக் காஷ்யப். இந்தி சினிமாவில் பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் அனுராக் காஷ்யப். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் தொடர்ந்து இந்தி சினிமாவில் மட்டும் இன்றி பான் இந்திய மொழி ரசிகர்களிடையேயும் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இந்தி சினிமாவில் இயக்குநராக பணியாற்றி வந்த அனுராக் காஷ்யப் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி என பான் இந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதில் குறிப்பாக இந்தி மற்றும் தமிழ் மொழிகளில் அனுராக் காஷ்யப் அதிக அளவில் படங்களில் நடித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டு அனுராக் காஷ்யப் நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் டகாய்ட்: எ லவ் ஸ்டோரி. தெலுங்கு மற்றும் இந்தி என இரண்டு மொழிகளிலும் திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தென்னிந்திய சினிமா குறித்து விருது விழா ஒன்றில் அனுராக் காஷ்யப் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




தென்னிந்தியத் படங்களைப் பார்க்கும்போது தன்னம்பிக்கை ஏற்படுகிறது:
ஹாலிவுட்டின் அப்செஷன்’ (Obsession) படம் குறித்து அனைவரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்த மூன்று படங்களிலுமே அதே போன்றதொரு தீவிரத்தன்மை (intensity) காணப்படுகிறது என்று அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். மேலும் தென்னிந்தியத் திரைப்படங்களைப் பார்க்கும்போது, எதையும் சாத்தியப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்குள் ஏற்படுகிறது என்றும் இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப் பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
Also Read… திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது கருப்பு படம் – கொண்டாட்டத்தில் படக்குழு!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
Director/Actor #AnuragKashyap recently:
– Everyone is talking about Hollywood’s #Obsession. But all three films starring #PradeepRanganathan have that same Obsession-like intensity. When I watch South Indian cinema, it gives me the confidence that anything is possible. pic.twitter.com/RJ3ZXtTp0F
— Movie Tamil (@_MovieTamil) July 3, 2026
Also Read… Malavika Mohanan: பிகினி அணிவதில் என்ன தவறு? அதிரடியாக தனது கருத்தை முன்வைத்த மாளவிகா மோகனன்!