திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது கருப்பு படம் – கொண்டாட்டத்தில் படக்குழு!
Karuppu has crossed the 50 days mark in theaters | தமிழ் சினிமாவில் கடந்த மே மாதம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் படம் கருப்பு. இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 50 நாட்களைக் கடந்துள்ளது.
தமிழ் சினிமாவில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தொடர்ந்து ஜனவரி மாதம் முதல் தற்போது ஜூன் மாதம் முடிய பலப் படங்கள் திரையரங்குகளில் தொடர்ந்து வெளியாகி உள்ளது. மேலும் இந்தப் இந்த ஜூலை மாதம் தொடங்கியதுமே படம் திரையரங்குகளில் வெளியாக தொடங்கியது. தொடர்ந்து இந்த 6 மாத காலத்தில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல ஹிட் படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இருந்தாலும் தமிழ் சினிமாவில் இந்த 6 மாதத்தில் அதிக வசூல் செய்த படமாக உள்ளது கருப்பு படம். இந்தப் படம் தமிழ் சினிமாவில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளது. மேலும் இந்த கருப்பு படம் தமிழ் நாட்டில் மட்டும் இன்றி உலக அளவில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடித்து இருந்த நிலையில் நடிகை த்ரிஷா கிருஷ்ணன், இந்திரன்ஸ், ஆர்.ஜே.பாலாஜி, சுவாசிகா என பலர் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி எழுதி இயக்கி இருந்த நிலையில் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது கருப்பு படம்:
அதன்படி கருப்பு படம் கடந்த மே மாதம் 15-ம் தேதி 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. மேலும் இந்தப் படம் கடந்த மாதமே ஓடிடியில் வெளியாகி இருந்தாலும் தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது. படத்தில் வருவது போல ஜஸ்ட் காட் திங்க்ஸ் என்று கூறுவது போல எதிர்பார்த்ததை விட இந்தப் படம் அதிக அளவில் வரவேற்பைப் பெற்றது படக்குழுவினரை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
Also Read… பிளாஸ்ட் பட இயக்குநருடன் இணையும் சியான் விக்ரம்? – வைரலாகும் தகவல்!
கருப்பு படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
A story rooted in faith, emotion, and humanity…
Celebrating 50 successful days of #Karuppu💥in theatres! This milestone belongs to each and every one of you.
Thank you to all our audiences and #AnbaanaFans for your unwavering love and support.
The ONE @Suriya_offl‘s mega… pic.twitter.com/ROWNpUZsfv
— DreamWarriorPictures (@DreamWarriorpic) July 3, 2026
Also Read… RJ Balaji: அஜித்துடன் படத்தில் இணைவீர்களா? நச் பதிலை கொடுத்த ஆர்.ஜே.பாலாஜி!



