AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

8 ஆண்டுகளைக் கடந்தது ராட்சசன் படம்… நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட எமோஷ்னல் பதிவு!

8 Years Of Ratsasan Movie | நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் சைக்கோ த்ரில்லர் பாணியில் முன்னதாக வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றப் படம் ராட்சசன். இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

8 ஆண்டுகளைக் கடந்தது ராட்சசன் படம்… நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட எமோஷ்னல் பதிவு!
ராட்சசன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 05 Oct 2026 17:04 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் தமிழ் சினிமாவில் வெளியான படங்கள் தொடர்ந்து ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது. அதன்படி நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 05-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ராட்சசன். சைக்கோ த்ரில்லர் பாணியில் உருவாகி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப் படத்தினை இயக்குநர் ராம் குமார் எழுதி இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷால் உடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர்.

அதன்படி நடிகை அமலா பால் நாயகியாக நடித்து இருந்த நிலையில் அவர்களுடன் இணைந்து நடிகர்கள் காளி வெங்கட், ராதா ரவி, நிழல்கள் ரவி, சங்கிலி முருகன், முனிஷ்காந்த், நான் சரவணன், சுசேன் ஜார்ஜ், வினோதினி, மோனிகா, உஷா எலிசபெத், வினோத் சாகர், கஜராஜ், ஜெய் ஆனந்த், பசுபதி, தங்கம் பரமானந்தம், சஞ்சய், ரவீனா தாஹா, அபிராமி, ராகவி ரேணு, பிரியா, திரிஷாலா, ரவிசங்கர், கீதா நாராயணன் மற்றும் ரேகா பத்மநாபன் என பலர் இந்தப் படத்தில் நடித்து இருந்தனர்.

8 ஆண்டுகளைக் கடந்தது ராட்சசன் படம்:

இந்த நிலையில் படம் திரையரங்குகளில் வெளியாகி 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் விஷ்ணு விஷால் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில் கூறியதாவது, இப்போது 8 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், நான் எங்கு சென்றாலும் ‘ராட்சசன்’ படம் அனைவரின் மிகுந்த விருப்பத்திற்குரியதாகவே இருக்கிறது. இந்தப் படம் எங்கள் அனைவரின் மனதிலும் இவ்வளவு ஆழமாகப் பதிந்துவிடும் என்று அறியாமலேதான் நாங்கள் இதை உருவாக்கினோம். அன்று முதல் இன்றுவரை கிடைத்த அன்பும், பாராட்டும், அந்தப் பயணமும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு நெகிழ்ச்சியானவை.

இந்தப் படம் தொடங்கி, அதன் பிறகு நான் நடித்த ஒவ்வொரு படத்திலும் என் மீது நீங்கள் வைத்த அன்புக்கும் நம்பிக்கைக்கும் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்; உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்ற நான் தொடர்ந்து முயற்சிப்பேன். இப்போது, ​​அடுத்து வரவிருக்கும் இரண்டு வானம் திரைப்படத்தின் மூலம் ஒரு புதிய உலகத்திற்குள் நுழைய வேண்டிய நேரம் வந்துவிட்டது.

Also Read… Lokesh Kanagaraj: பாலிவுட் செல்லும் லோகேஷ்.. அக்ஷய் குமாருடன் புது படத்தில் இணைகிறாரா?

விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு:

Also Read… Scene Movie: சூர்யாவின் சீன் பட ஓடிடி உரிமை லாக்.. அட இதனை கோடிகளுக்கு விற்பனையா?

Follow Us