தேதி குறிச்சாச்சு… விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் படத்தின் ரிலீஸ் எப்போது – அப்டேட் இதோ
Irandu Vaanam Movie Release Update | தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் உருவாகி அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் இரண்டு வானம். இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபாடி குழு என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகம் ஆனவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் நாயகனாக அறிமுகம் ஆன முதல் படமே ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்தப் படங்கள் வரிசையாக வெளியானது. மேலும் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகும் பெரும்பாலான படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான படம் கட்டா குஸ்தி 2. இந்தப் படம் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்றது போல ஓடிடியிலும் தற்போது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வருகின்றது.
தொடர்ந்து சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் பிசியாக வலம் வரும் விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாம உள்ள படம் இரண்டு வானம். இந்தப் படம் உருவாகி பல மாதங்களாக கிடப்பில் இருக்கும் நிலையில் தற்போது வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.




விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் படத்தின் ரிலீஸ் எப்போது?
அதன்படி இந்த இரண்டு வானம் படம் உருவாகி எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் அதிக அளவில் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது வெளியான தகவலின்படி விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் படம் வருகின்ற 23-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ நடித்து உள்ள நிலையில் இது மமிதாவின் நடிப்பில் திரையரங்குகளில் இந்த 2026-ம் ஆண்டில் வெளியாகும் 5-வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Also Read… அஜித்தை முதல்வராக்குவதே லட்சியம் – மேலும் ஒரு புதிய கட்சியைத் தொடங்கிய ரசிகர்கள்
இரண்டு வானம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
Love in its most purest, intense form ❤️#IranduVaanam in theatres worldwide from 23rd October 2026.
A film by @dir_ramkumar.
Starring @TheVishnuVishal @_mamithabaiju.
A @dhibuofficial musical.@SathyaJyothi @arjun1on @Dinesh_K_Babu @Sanlokesh @artdirectorgopi @ParthiSnathan… pic.twitter.com/xGBiZW1ipd— Sathya Jyothi Films (@SathyaJyothi) September 23, 2026
Also Read… விஜய் ஆண்டனியின் அப்பாகுட்டி படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்