AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

விஜய் ஆண்டனியின் அப்பாகுட்டி படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்

Appakutty Movie Release Update | நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் அடுத்ததாக இவரது நடிப்பில் திரையரங்குகளில் வெளியாக உள்ள அப்பாகுட்டி படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

விஜய் ஆண்டனியின் அப்பாகுட்டி படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியானது அப்டேட்
அப்பாகுட்டிImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Updated On: 23 Sep 2026 10:36 AM IST

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகி தற்போது நாயகனாகவும், தயாரிப்பாளராகவும் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவர் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனதில் இருந்து தொடர்ந்து இவரது இசையில் வெளியான பெரும்பாலான பாடல்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் இசையமைக்கும் படம் பெரிய அளவில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கவில்லை என்றாலும் விஜய் ஆண்டனியின் இசையில் உருவாகும் பாடல்கள் நிச்சயமாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவிடும். மேலும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஜிப்ரிஷ் வார்த்தைகளை அதாவது அந்த வார்த்தைக்கு அர்த்தமே இருக்காது அவற்றை பாடல்களில் இணைந்து ரசிகர்களிடையே வைரலாக்கி வந்தவர் விஜய் ஆண்டனி என்பதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இசையமைப்பாளராக உச்சத்தில் இருந்த விஜய் ஆண்டனி தொடர்ந்து தற்போது நாயகனாக தமிழ் சினிமாவை கலக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி நடிகர் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் பெரும்பாலன படங்களை அவரது தயாரிப்பு நிறுவனமான விஜய் ஆண்டனி புரடெக்‌ஷன் நிறுவனமே தயாரித்தும் வருகிறது. அந்த வகையில் விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக தமிழ் சினிமாவில் வெளியான படம் நூறு சாமி. இந்தப் படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே மட்டும் இன்றி தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

விஜய் ஆண்டனியின் அப்பாகுட்டி படத்தின் ரிலீஸ் எப்போது?

இந்தப் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படம் அப்பாகுட்டி. இயக்குநர் மு மாறன் இந்தப் படத்தை எழுதி இயக்கி உள்ள நிலையில் படம் ஒரு ஆக்‌ஷன் ஃபேமிலி ட்ராமா செண்டிமெண்டை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிகை ப்ரீத்தி அஸ்ரானி நடித்து உள்ளார். அவர்களுடன் இணைந்து நடிகர்கள் பகவதி பெருமாள், முத்துக்குமார், ஜென்சன் திவாகர், லிசி ஆண்டனி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். மேலும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி படம் வருகின்ற 16-ம் தேதி அக்டோபர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Also Read… டிராமா குயின் என்ற பட்டத்தை ஆனந்திக்கு போட்டியாளர்கள் – கதறிய ஆனந்தி!

அப்பாகுட்டி படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… ஏழு கடல் ஏழு மலை படத்தின் கேரள ரிலீஸ் உரிமையைப் பெற்றது பிரபல நிறுவனம்

Follow Us