Myssa: ஒரு மகளின் வாக்குறுதி… ஆக்ஷன் நாயகியாக ராஷ்மிகா… வெளியானது மைசா திரைப்படத்தின் டீசர் வெளியானது!
Myssa Movie Teaser : தெலுங்கு மற்றும் தென்னிந்திய சினிமாவில் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் நடிப்பில் தெலுங்கில் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள படம்தான் மைசா. இப்படமானது பிரம்மாண்டமான கதையில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இதன் டீசர் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நாயகியாக இருந்துவருபவர்தான் ராஷ்மிகா மந்தனா (Rashmika Mandanna). இவரின் நடிப்பில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி போன்ற மொழிகளில் பல படங்கள் வெளியாகியுள்ளது. இவரின் நடிப்பில் தெலுங்கில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகிவரும் திரைப்படம்தான் மைசா (Myssa). இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் ரவீந்திர புள்ளே (Rawindra Pulle) இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் மைசா. இந்த படத்தை அன்பார்முலா பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க, மலையாள இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் (Jakes Bejoy) இசையமைத்துள்ளார்.
இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகளில் இருந்துவருகிறது. அந்த விதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங்கிலிருந்து ராஷ்மிகா ஓய்வில் உள்ளார். அந்த விதத்தில் இப்படமானது நவம்பர் மாதத்தில் வெளியாகி காத்திருக்கும் நிலையில், இன்று அதிரடி ஆக்ஷன் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.




இதையும் படிங்க: காந்தாவாக வித்யா பாலன்.. கதாபாத்திர அறிமுக வீடியோவை பகிர்ந்த ஜெயிலர் 2 படக்குழு!
மைசா படக்குழு வெளியிட்ட ராஷ்மிகா மந்தனாவின் அதிரடி டீசர் பதிவு:
No fear to hold.
No truth to hide.
Just ONE promise to keep.#Mysaa – A DAUGHTER’S PROMISE.#MysaaTeaser out now ❤️🔥
— https://t.co/kUg5j4XxA0IN CINEMAS WORLDWIDE ON 27.11.26. 💥@iamRashmika @RawindraPulle @jakes_bejoy @unformulafilms @TSeries @tseriessouth pic.twitter.com/AJCj8izHPY
— UnFormula Films (@unformulafilms) September 20, 2026
மைசா படத்தின் டீசர் எப்படி இருக்கு;
இந்த டீசரில் ராஷ்மிகா மந்தனா சாதாரணமான கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். இவர் தனது தந்தைக்கு செய்துகொடுத்து சத்தியத்திற்காக பல செயல்களை செய்கிறார். இதுவரை நடித்த படங்களை விட, ராஷ்மிகா இப்படத்தில் அதிரடி ஆக்ஷன் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் புஷ்பா படத்தில் வில்லனாக நடித்த நடிகர்தான், இப்படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். தற்போது இந்த மைசா படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க: டபுள் கேம் தன்யா.. மாத்தி மாத்தி பேசும் லட்சுமி பிரியா – வார்த்தைகளால் வெளுத்து வாங்கிய ஜாவித் – அனல் பறக்கும் புரோமோ!
மைசா திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது;
இந்த படமானது ராஷ்மிகாவின் கேரியரில் அதிரடியாக ஆக்ஷன் கதைகளத்த்தில் இப்படமானது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராஷ்மிகா மைசா என்ற வேடத்தில் நடித்துள்ளார். அந்த விதத்தில் இப்படத்தை வரும் 2026ம் ஆண்டு நவம்பர் 27ம் தேதியில் உலகமெங்கும் வெளியாக காத்திருக்கிறது. இப்படம் தீபாவளிக்கு பின் பெருமையாக வெளியாகும் நிலையில், நிச்சயம் இப்படம் வெற்றியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.