Jailer 2: காந்தாவாக வித்யா பாலன்.. கதாபாத்திர அறிமுக வீடியோவை பகிர்ந்த ஜெயிலர் 2 படக்குழு!
Vidya Balans Character Introduction: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தமிழில் வெளியாக காத்திருக்கும் புதிய திரைப்படம்தான் ஜெயிலர் 2. இந்த படமானது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் நிலையில், இதில் வித்யா பாலன் நடித்துள்ளார். தற்போது இவர் நடிக்கும் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் (Nelson dilipkumar) இயக்கத்தில் தமிழ் சினிமாவில் வெளியாக காத்திருக்கும் மாபெரும் படம்தான் ஜெயிலர் 2 (Jailer 2). இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் (Superstar Rajinikanth) ஹீரோவாக நடிக்க, அவருடன் பான் இந்திய நடிகர்கள் பலரும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் கலாநிதிமாறன் தயாரித்துள்ளார். இப்படம் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் 1 படத்தின் தொடர்ச்சியான கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் சினிமாவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் திரைப்படமாக இருந்துவருகிறது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் (Anirudh ravichandar) இசையமைக்க, பாடல்கள் மற்றும் பின்னணி இசை சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படமானது வரும் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் வெளியாக காத்திருக்கும் நிலையில், தற்போது இப்படத்திலிருந்து கதாபாத்திரங்கள் அறிமுக வீடியோக்கள் வெளியாகிவருகிறது. ஏற்கனவே சுராஜ் வெஞ்சாரமூடு மற்றும் எஸ்.ஜே.சூர்யா போன்ற நடிகர்களின் அறிமுக வீடியோ வெளியான நிலையில், தற்போது வித்யா பாலனின் கதாபாத்திர அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது.




இதையும் படிங்க: டபுள் கேம் தன்யா.. மாத்தி மாத்தி பேசும் லட்சுமி பிரியா – வார்த்தைகளால் வெளுத்து வாங்கிய ஜாவித் – அனல் பறக்கும் புரோமோ!
காந்தாவாக ஜெயிலர் 2-வில் வித்யா பாலன்;
பாலிவுட் சினிமாவில் சிறப்பான படங்களில் நாயகியாக நடித்துவருபவர் வித்யா பாலன். இவர் தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். இறுதியாக அஜித் குமாரின் நேர்கொண்டப் பார்வை படத்தில் ஜோடியாக நடித்திருந்தார். தற்போது அந்த படத்திற்கு பின், தமிழில் இவர் இணைந்திருக்கும் படம்தான் ஜெயிலர் 2. இந்த படத்தில் காந்தா என்ற வேடத்தில் இவர்நடித்துள்ளாராம் .
இதையும் படிங்க: வெற்றி வெற்றி வெற்றி… பார்சிலோனா கார் ரேஸில் 2வது இடத்தை பிடித்தது அஜித் குமாரின் அணி!
தற்போது இதன் கதாபாத்திர அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ஜெயிலர் 2 படத்தில் வித்யா பாலா வில்லன் வேடத்தில் நடிப்பதாக தெரிகிறது. இந்த வீடியோவில் கையில் சிகரெட் உடன் வித்யா பாலா இருக்கும் நிலையில், மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவருகிறது.
வித்யா பாலனின் கதாபாத்திர அறிமுகம் குறித்து ஜெயிலர் 2 படக்குழு வெளியிட்ட எக்ஸ் பதிவு:
Introducing Vidya Balan as Kantha from the world of #Jailer2 💥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vidya_balan @iam_SJSuryah #SurajVenjaramoodu @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk #PallaviSingh @valentino_suren @Alagiakoothan… pic.twitter.com/kaCWF3beIN
— Sun Pictures (@sunpictures) September 20, 2026
இந்த ஜெயிலர் 2 படமானது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவரும் நிலையில், இப்படம் வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் முதல் ஷாருக்கான் வரை பல்வேறு பான் இந்திய நடிகர்களும் இணைந்து நடித்துள்ளனர். அந்த விதத்தில் இப்படம் நிச்சயம் பான் இந்திய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.