Sai Abhyankkar: தனுஷின் டி56 படத்தில் இணைவதை உறுதி செய்த சாய் அபயங்கர்!
Dhanush D56 Movie Music Director: லப்பர் பந்து திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து. இவர் தமிழில் தற்போது தனுஷின் 56வது படத்தை இயக்குகிறார். இவரின் இப்படத்தில் இசையமைப்பாளாராக சாய் அபயங்கர் இணைத்துள்ளதாக அப்டேட் கொடுத்துள்ளார், இது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் உச்ச நாயகனாக இருந்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து புது புது படங்கள் உருவாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியாக திரைப்படம் கர. இந்த படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனமானது தயாரித்திருந்தது. இந்த படமானது கடந்த 2026ம் மார்ச் மாதத்தில் வெளியான நிலையில், இவருக்கு கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இந்த படத்திற்கு பின் தனுஷின் நடிப்பில் நடிப்பில் உருவாகிவரும் படம் ஓம் (OM). இதை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி (Rajkumar Periasamy) இயக்கியுள்ள நிலையில், தனுஷின் தயாரிப்பு நிறுவனம் இதை தயாரித்துள்ளது.இப்படமானது 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் வெளியாகிறது.
இந்த படத்திற்கு பின் தனுஷ், இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து (Tamizharasan Pachamuthu) இயக்கத்தில் டி56 படத்தில் இணைகிறார். இந்நிலையில், இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இணைவதாக அவர் உறுதி செய்துள்ளார். இது தொடர்பான பதிவை இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பகிர்ந்துள்ளார்.




இதையும் படிங்க: காந்தாவாக வித்யா பாலன்.. கதாபாத்திர அறிமுக வீடியோவை பகிர்ந்த ஜெயிலர் 2 படக்குழு!
தனுஷின் டி56 படத்தில் இசையமைப்பாளராக இணைவதை உறுதி செய்த சாய் அபயங்கர்:
Kekaranga sollunga @tamizh018 brother ✨♥️ pic.twitter.com/FemnRdruOc
— abhyankkar (@SaiAbhyankkar) September 20, 2026
அந்த பதிவில் சாய் அபயங்கர், “எல்லாரும் கேக்குறாங்க சொல்லுங்க ப்ரோ” என இயக்குநர் தமிழரசன் பச்சமுத்துவை டேக் செய்துள்ளார். இது தொடர்பான எக்ஸ் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
தனுஷுடன் மீண்டும் கைகோர்க்கும் சாய் அபயங்கர்:
இசையமைப்பாளர் சாய் அபயங்கர் தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளராக மக்கள் மத்தியில் பிரபலமானவர். இவர் தனுஷின் ஓம் படத்தில் இசையமைத்துள்ள நிலையில், இந்த படத்தின் பாடல்களும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்த படத்திற்கு பின் தற்போது தனுஷின் 56வது படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.
இதையும் படிங்க: ஒரு மகளின் வாக்குறுதி… ஆக்ஷன் நாயகியாக ராஷ்மிகா… வெளியானது மைசா திரைப்படத்தின் டீசர் வெளியானது!
இந்த படமானது மதுரை கிராமத்து கதைக்களத்தில் உருவாக்கப்படுகிறதாம். அந்த வகையில் இப்படத்திற்கு படையல் என படக்குழு டைட்டில் வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ப்ரீ புரொடக்ஷன்ஸ் பணிகளானது தொடங்கிய நிலையில், வரும் 2026ம் ஆண்டு நவம்பரில் இதன் ஷூட்டிங் தொடங்குவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இப்படமானது அதிரடி கிராமத்து கதைக்களத்தில் உருவாக்கவுள்ள நிலையில், 2027ம் ஆண்டு கோடைக்காலத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் இப்படத்தில் நாயகியாக யார் இணைகிறார் என்பது குறித்த எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.