AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Nani: கவர்ச்சிக்கு மட்டுமல்ல.. கயாடு லோஹரின் கதாபாத்திரம் பற்றி பேசிய நானி!

Nani About Kayadu Lohars Character In The Paradise: தெலுங்கு சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக இருந்துவருபவர் நானி. இவரின் நடிப்பில் தற்போது மிக பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள படம்தான் தி பாரடைஸ். இப்படத்தில் நடிகையாக கயாடு லோஹர் நடித்துள்ள நிலையில், அவரின் கதாபாத்திரம் இப்படத்தில் எவ்வாறு இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Nani: கவர்ச்சிக்கு மட்டுமல்ல.. கயாடு லோஹரின் கதாபாத்திரம் பற்றி பேசிய நானி!
காயடு லோஹர் பற்றி நானிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 20 Sep 2026 21:39 PM IST

தென்னிந்திய சினிமா ரசிகர்களால் நேச்சுரல் ஸ்டார் (Natural Star) என்று அழைக்கப்பட்டுவரும் நாயகன்தான் நானி (Nani). இவரின் நடிப்பில் தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் ஹிட் 3 (HIT 3). இந்த படம் கடந்த 2025ம் ஆண்டு மே மாதத்தில் வெளியான நிலையில், சூப்பர் ஹிட் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த திரைப்படத்திற்கு பின் நானியின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் புதிய படம்தான் தி பாரடைஸ் (The Paradise). இந்த படத்தை தெலுங்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நானி ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் (Kayadu Lohar) நடித்துள்ளார்.

மேலும் இதில் நடிகர் மோகன் பாபு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இந்த படமானது சிறப்பான ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், இந்த 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நானி, அதில் நடிகை கயாடு லோஹரின் கதாபாத்திரம் எவ்வாறு இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஒரு மகளின் வாக்குறுதி… ஆக்ஷன் நாயகியாக ராஷ்மிகா… வெளியானது மைசா திரைப்படத்தின் டீசர் வெளியானது!

நடிகை கயாடு லோஹரின் கதாபாத்திரம் எவ்வாறு இருக்கும் நானி சொன்ன விஷயம்:

அந்த நேர்காணலில் பேசிய நடிகர் நானி, அதில் “அவரது கதாபாத்திரம் பாடல்களுக்கும் கவர்ச்சிக்கும் மட்டும் உரியதல்ல. குறிப்பாக இரண்டாம் பாதியில், ஒரு முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் வலுவான உணர்ச்சிப் பயணம் அவருக்கு உண்டு. அவரது கதாபாத்திரம் பார்வையாளர்களை நிச்சயம் ஆச்சரியப்படுத்தும்” என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: காந்தாவாக வித்யா பாலன்.. கதாபாத்திர அறிமுக வீடியோவை பகிர்ந்த ஜெயிலர் 2 படக்குழு!

நானி மற்றும் கயாடு லோஹரின் தி பாரடைஸ் பட புக்கிங் குறித்து வெளியான பதிவு:

நானியின் தி பாரடைஸ் திரைப்படமானது பான் இந்திய மொழிகள்;ல் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் பக்கா தெலுங்கு படம் என்ற நிலையில், இதன் மீது அதிக எதிர்பார்ப்புகள் இருக்கிறது. இப்படம் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதியில் வெளியாக காத்திருக்கிறது. அந்த விதத்தில் இந்த படத்தின் டிக்கெட் ப்ரீ புக்கிங் வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதியில் மாலையில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us