விஜய் ஆண்டனி ஒரு ஜென்டில்மேன் – புகழ்ந்து பேசிய திருப்பூர் சுப்ரமணியம்
Tirupur Subramaniam said Vijay Antony is a perfect gentleman | தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவராகச் செயல்பட்டு வரும் திருப்பூர் சுப்ரமணியம் சமீபத்தில் அளித்தப் பேட்டி ஒன்றில் நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி குறித்து புகழ்ந்து பேசியது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் சினிமாவில் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கி இருந்தாலும் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்து இருந்தார். மேலும் இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து அந்தப் படங்களும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து பிசியான இசையமைப்பாளராக வலம் வந்த விஜய் ஆண்டனி நடிப்பு மீது இருந்த ஆர்வம் காரணமாக தமிழ் சினிமாவில் நடிகராக நடிக்கத் தொடங்கினார். தமிழ் சினிமாவில் தொடர்ந்து பலப் படங்களில் நாயகனாக நடித்து உள்ளார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் இசையில் வெளியான படங்களைப் போல ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் படங்களில் நடித்து வந்த நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் நூறு சாமி. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் விஜய் ஆண்டனியை புகழ்ந்து பேசிய திருப்பூர் சுப்ரமணியம் பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.




விஜய் ஆண்டனியை புகழ்ந்து பேசிய திருப்பூர் சுப்ரமணியம்:
விஜய் ஆண்டனி ஒரு மிகச்சிறந்த பண்பாளர். நூறு சாமி படத்தின் வெளியீட்டின்போது கடைசி நேரத்தில் சில நிதிச் சிக்கல்கள் எழுந்தன. பொதுவாகவே எல்லாப் படங்களிலும் இத்தகைய சிக்கல்கள் வருவதுண்டு. நிதி வழங்கிய தரப்பினருடன் சரியான புரிதல் இல்லாத சூழல் அது. படம் வெளியாகும் சமயத்தில் அவர் ஹைதராபாத்தில் இருந்தார். ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் அனைத்துப் பிரச்சினைகளையும் சரிசெய்துவிடுவதாக அவர்களிடம் தெரிவிக்குமாறு அவர் என்னிடம் கூறினார்.
அவர் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குள் அதைச் சரிசெய்துவிடுவார் என்று நான் அவர்களிடம் உறுதியளித்தேன். அவர் சொன்னபடியே அதைச் செய்து முடித்தார். அது அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை என்பதால் அவர் எனக்குப் பகிரங்கமாக நன்றி தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை, ஆனாலும் அவர் நன்றி தெரிவித்தார். அவர் ஒரு மிகச்சிறந்த பண்பாளர் என்று தெரிவித்துள்ளார் திருப்பூர் சுப்ரமணியம்.
Also Read… Kayadu Lohar: எனக்கான எல்லைகள்.. படக்குழுவிடம் எப்போதும் ஓபனாக பேசிவிடுவேன் – கயாடு லோஹர்!
இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:
#VijayAntony is a perfect gentleman. During #NooruSaami, there were last-minute financial hurdles. Every movie has these usual last-minute problems. There was no proper understanding with the finance party. He was in Hyderabad during the movie’s release, and he asked me to let… pic.twitter.com/Kyq9Hn57Wv
— Movies Singapore (@MoviesSingapore) July 13, 2026
Also Read… Atharvaa: அரசியலை 100 சதவீதம் பின்பற்றுவேன்.. ஆனால் – அதர்வா சொன்ன விஷயம்!