AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

AK64 Movie: அஜித் குமாரின் AK64 படத்தில் இணையும் பேமஸ் நடிகை.. அட அவர்தான்!

AK64 Movie Update: தமிழ் சினிமாவினுள் உச்ச நாயகனாக இருந்துவருபவர் அஜித் குமார். இவரின் நடிப்பில் AK64 படமானது உருவாக்கவுள்ளது. இதில் பிரபல நடிகை ஒருவர் முக்கியமான வேடத்தில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த நடிகை யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.

AK64 Movie: அஜித் குமாரின் AK64 படத்தில் இணையும் பேமஸ் நடிகை.. அட அவர்தான்!
AK64 திரைப்பட அப்டேட்Image Source: Social Media
Barath Murugan
Barath Murugan | Published: 14 Jul 2026 17:20 PM IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலிருந்து, முழுவதுமாக கார் ரேஸ் (Car Race) பயிற்சியில் ஈடுபட்டுவருகிறார். சர்வதேச நாடுகளில் நடக்கும் ரேஸ் பந்தயத்தில் தனது அணியுடன் கலந்துகொண்டு வரவேற்பை வெற்றி பெற்றிருக்கிறார். ஐரோப்பா, மலேஷியா, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்றிருந்த கார் ரேஸ் பந்தயத்தில் கலந்துகொண்டு வெற்றி பெற்றதிருக்கிறார். சினிமாவில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகிய இப்படத்தை, இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் (Adhik Ravichandran) இயக்கியிருந்தார். இப்படம் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலித்து சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்த நிலையில், இதையடுத்து அஜித்தின் 64வது படத்தையும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன்தான் இயக்கவுள்ளார்.

இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில், படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வெளியாகிவருகிறது. அதில் தென்னிந்திய சென்சேஷனல் நடிகை ஒருவர் இப்படத்தில் நடிக்கிறாராம். அது யார் தெரியுமா?.

இதையும் படிங்க: மலேசியாவில் நடைபெறும் ஜெயிலர் 2 படத்தின் ஆடியோ லாஞ்ச்? வைரலாகும் தகவல்

அஜித் குமாரின் AK64 படத்தில் இணையும் சென்சேஷனல் நடிகை:

அஜித் குமாரின் இப்படத்தில், அவரின் சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாக்கவுள்ளதாம். பல தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள்நடந்த நிலையில், அஜித்தின் சம்பள உயர்வின் காரணமாக அது கைவிட்டு போனதாக வட்டாரங்கள் கூறுகிறது. அதனால் தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் அஜித் புது படத்தை தயாரிக்கவுள்ளார். இதில் நடிகை கயாடு லோஹர் முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளாராம்.

இதையும் படிங்க: சிறை பட இயக்குநருடன் இணையும் கார்த்தி? – வைரலாகும் தகவல்!

ஏற்கனவே இதில் நடிகை ஸ்ரீலீலா கதாநாயகியாக நடிக்கவுள்ள நிலையில், அவருடன் ஸ்வாசிகாவும் முக்கிய வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது நடிகை கயாடு லோஹரும் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. உண்மையானால் படம் பிரம்மாண்டமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் குமாரின் 64வது படத்தில் கயாடு லோஹர் இணைவது குறித்து வைரலாகும் பதிவு:

அஜித் குமாரின் 64வது படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளாராம். இந்த படமானது ஒரு குடும்ப பொழுதுபோக்கு மற்றும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாக்கப்படவுள்ளதாம். இப்படத்தின் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்படும் நிலையில், ஷூட்டிங் குறித்தும் தகவல்கள் வெளியாகிவருகிறது.

Follow Us