Ajith Kumar: சினிமாவில் சம்பளத்தை குறிக்கும் அஜித் குமார்.. காரணம் இதுதானா?
Ajiths Reduced Salary: தென்னிந்திய சினிமாவில் உச்ச நாயனாக இருந்துவருபவர் அஜித் குமார். இவர் கிட்டத்தட்ட ஒற்றை ஆண்டுகளுக்கும் மேல் எந்த படங்களிலும் நடிக்காமல் முழுமையாக கார் ரேஸில் கவனம் செலுத்திவருகிறார். இந்நிலையில் இவர் சினிமாவில் படங்களில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிவருகிறது.
நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தற்போது முழுமையாக கார் ரேஸ் பணிகளில் இருந்துவருகிறார். இவரின் நடிப்பில் கடந்த 2025ம் ஆண்டில் குட் பேட் அக்லி (Good Bad Ugly) என்ற படமானது வெளியாகியிருந்தது. திரையரங்குகளில் சிறப்பான வரவேற்பை பெற்றிருந்த இப்படமானது சுமார் ரூ 200 கோடிகளுக்கு மேல் வசூலித்திருந்தது. இந்த படத்தின் ஷூட்டிங் 2024ம் ஆண்டு டிசம்பரில் முழுமையாக நிறைவடைந்த நிலையில், அதிலிருந்தே அஜித் குமார் கார் ரேஸ் (Car Race) பயிற்சிகளில் கலந்துகொள்ள தொடங்கினார். கிட்டத்தட்ட 2- 3 மாதங்கள் பயிற்சியில் இருந்த அவர், இந்தியாவின் சார்பாக பல்வேறு ரேஸ்களில் கலந்துகொண்டார். சர்வதேச ரேஸ் போட்டிகளிலும் அஜித் தனது அணியுடன் கலந்துகொண்டு வெற்றிபெற்றிருக்கிறார். இந்த வரிசையில் தற்போது ஆசிய லீ மான்ஸ் போட்டியில் இந்தியாவின் சார்பாக தனது அணியுடன் அஜித் கலந்துகொள்கிறார்.
இவர் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் எந்த படங்ககளிலும் நடிக்கவில்லை என்ற நிலையில், தற்போது அவர் தனது சம்பளத்தை குறைத்துக்கொண்டதாக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகிவருகிறது. அஜித்தின் புது படங்களுக்கு இரு நிறுவங்களிடம் பேசப்பட்ட நிலையில், அவர்கள் அஜித்தின் சம்பளத்தை மேலும் குறைக்க சொன்னதாக கூறப்படுகிறது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: 12 மணிநேரம் ஆண்.. 12 மணிநேரம் பெண்.. டபுள் டமாக்கவான டபுள் ஆக்குபென்சி படம் எப்படி இருக்கு?- விமர்சனங்கள் இதோ!
தனது சம்பளத்தை குறைத்த அஜித் குமார்:
அஜித் குமார் தனது சம்பளத்தை ரூ 150 கோடியாகக் குறைக்க முடிவு செய்துள்ளாராம். இது அவரது குட் பேட் அக்லி திரைப்படத்திற்காக சம்பளமாக ரூ163 கோடி வாங்கியிருந்த நிலையில், தற்போது அதிலிருந்து ரூ 13 கோடியை குறைத்து ரூ 150 கோடியை படங்களில் நடிப்பதற்கு சம்பளமாக கேட்கிறாராம். அஜித்தின் 64வது படத்திற்ககன் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்த நிலையிலும், தயாரிப்பு நிறுவனம் இன்னும் உறுதியாகவில்லை.
அஜித்திற்கு போட்டி இல்லாததால் தயங்குகிறதா தயாரிப்பு நிறுவனம் :
சமீபத்தில் ஹோம்பாலே புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன், அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா ஒரு சந்திப்பை நடத்தியுள்ளார். தற்போது அஜித்தின் சந்தை மதிப்பை கருத்தில்கொண்டு ரூ 90 கோடியை அவருக்கு சம்பளமாக கொடுப்பதாகவும், மீதி ரூ 100 கோடியை படத்திற்கு பயன்படுத்துவதாகவும் கூறியுள்ளதாம். அஜித்தின் திரைப்படத்தின் மூலம் தனது தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்க விரும்பிய ஒரு ரியல் எஸ்டேட் நிறுவன உரிமையாளருடன் மற்றொரு சந்திப்பு நடந்ததாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், தற்போதைய சந்தை நிலவரங்களைக் கருத்தில் கொண்டு, அவரும் அதிகபட்சமாக ரூ 110 கோடி மட்டுமே வழங்க முன்வந்துள்ளனர். அஜித் தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் சிறுத்தை சிவா இருவருடனும் படம் செய்வதாக ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படங்கள் பற்றிய அறிவிப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித் குமாரின் சம்பளம் குறைவு குறித்து வைரலாகும் பதிவு:
BUZZ – #AjithKumar has decided to reduce his salary to ₹150Cr, even lower than his #GoodBadUgly salary (₹163Cr). Recently, a meeting happened with Hombale Productions and Suresh Chandra; however, they agreed to give only a maximum salary of ₹90Cr considering current market… pic.twitter.com/083Kf07azA
— Movies Singapore (@MoviesSingapore) June 12, 2026
இதையும் படிங்க: லீ மான்ஸில் குடும்பத்தினருடன் நடிகர் அஜித் – வைரலாகும் போட்டோஸ்